Sunday, April 12, 2020

சதிவலைகளும் புரளிகளும்

https://cdn.theatlantic.com/thumbor/muFAAWuH9hRuRsYo4YoFjbdX4No=/0x177:2000x1302/720x405/filters:format(png)/media/img/mt/2018/03/fakenews1-1/original.png
Conspiracy Theory: இயற்கையாகவோ அல்லது வேறு காரணத்தாலோ நடக்கும் நிகழ்ச்சிகளுக்குப்பின் "பெரும் சதிவலை" பின்னப்பட்டிருப்பதாக மக்களை நம்ப வைப்பது.  உதாரணமாக , "9/11 ஒரு உள்ளடி வேலை",  "புல்வாமா தாக்குதல் இந்திய அரசின் சதி ", என்பது போல.   இந்த 'சதி-வலை' தியரிகள்  அரசாங்கங்கள் உருவாகத் தொடங்கிய காலத்தில் இருந்தே உள்ளது.  இப்போதைய தொழில்நுட்பம் இதை ஒரு பெரும் அபாயகரமான, லாபகரமான தொழிலாகவே மாற்றி இருக்கிறது.  இடது-வலது பேதமில்லாத தொழில்.  இந்த சதிவலை-கதைகளை ஹார்வர்ட், IIT, MIT, ஸ்டான்போர்ட் போன்ற இடங்களில் பெரிய படிப்பு படித்தவர்களும் எப்படி நம்புகிறார்கள் ?   சில மாதங்களுக்கு முன்,  இந்தப் பொய்ச்செய்திகளுக்கு (fake news ) மக்கள் எப்படி விழுகிறார்கள் என்று 'சயன்டிபிக் அமெரிக்கா'   விரிவான ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது . 


ஒருவர் பெரிய  பெரிய கல்லூரிகளில் எத்தனைப் பட்டங்கள் பெற்றிருந்தாலும் அவர் எந்த பின்புலத்தில் வளர்க்கப்பட்டார் என்பது முக்கியம்..
1. பெற்றோர் பாதுகாப்புடன் அல்லது கண்டிப்புடன் வளர்க்கப்படுவோர் எளிதில் இந்த வலையில் அகப்படுவார்கள் என்கிறார்கள்.
2. அடுத்தது, ஆழ்ந்த இன, ஜாதி, மத நம்பிக்கைகளுடன் வளர்க்கப்படுபவர்கள்
3. அதற்கு அடுத்து வருபவர்கள் ஒரு குறிப்பிட்ட source of information மட்டுமே நம்புபவர்கள்.
4. பலமான முடிவான கருத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள்

வெளியிலிருந்து நம் உள்  வட்டாரத்துக்குப் பொய்ச் செய்திகள் எப்படிப் பரவுகின்றன ?
இதிலுள்ள படத்தைப் பாருங்கள்.
1. முதலில் தனிப்பட்ட நடிப்புடன் பழகி, சில பேரிடமாவது மீது நம்பிக்கை வரவைக்க வேண்டும்.
2. ஆரம்பத்தில் உண்மை சம்பவங்களை மட்டுமே பகிர வேண்டும்.
3. நம் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
4. பிறகு லேசாக புரளிகளைக் கலக்க வேண்டும்.
5. இது நம்முடைய நண்பரின் தொடர்புப்  பின்னலுக்குப் போய்ச்சேரும். பிறகு அங்கிருந்து வேறு தொடர்பு வலைகளுக்குப் பரவும்.
6. அப்புறம் புரளியை மெதுவாக அதிகரிக்க வேண்டும்.
7. எந்தப் பொய்ச் செய்தியிலும் கொஞ்சமாவது  உண்மை இருக்க வேண்டும்.
8. ஆர்வக் கோளாறில் எந்த அடிப்படையும் இல்லாமல் பெரிய அளவில் சொன்னால் மாட்டிக் கொள்வோம்.
9. புரளிகளில் படம், புள்ளி விவர சார்ட்கள் மிக அவசியம்.  முன்னது குறைவாகப் படித்தவர்களுக்கு.  பின்னது அதிகம் படித்தவர்களுக்கு.
( மாரிதாஸ் ஏன் 'சின்னத் தலைவர்' ஆனார், பாரிசாலன் ஏன் லாக்கப்புக்குப் போனார் என்பது இப்போது புரிந்திருக்கும் )
10. எந்தப் பொய்ச்செய்தியும் மீண்டும் மீண்டும் சலிக்காமல் சொல்லப்பட வேண்டும் (1.76 லட்சம் கோடி போல).  இந்த டெக்னீக், முதலில் தயங்கியவர்களின்  ஆழ்மனதில் சென்று வேலை செய்யும்.
11. Target ஆடியன்ஸ் அதிகம் படித்தவர்கள் என்றால், அவர்கள் மிகவும் அறிவாளிகள் என்பதை அடிக்கடி  குறிப்பிடப்பட வேண்டும்.  அவர்கள் ஈகோ வருடப்பட வேண்டியது முக்கியம்..
 

இப்போது வைரஸ் விஷயத்துக்கு வருவோம்.
சைனா மற்றும் அதைச் சூழ்ந்துள்ள தூரக்கிழக்கு நாடுகளில் இப்படிக் கண்டதையம் சாப்பிடுபவர்கள்தான் உள்ளனர்.  சூரத்தில் எதைத்தின்று plague வந்தது?
இந்தப் நோய்ப்  பரவலுக்கு சீனா முதல் குற்றவாளியா?  சந்தேகம் இல்லாமல் அதுதான் உண்மை.
இந்த நோயின் தாக்கத்தை உடனே அறிவிக்காமல் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை சிறையில் போட்டது மாபெரும் குற்றம்.  இந்தியாவிலும் நோய்ப் பரவலை 'மர்மக்காய்ச்சல்' என்று சொல்லி செய்திகளை அமுக்குவது,  நிர்வாகத்தின் குறைகளை வெளியே சொல்லும் டாக்டர்கள்  சிறைக்கு அனுப்பப்படுவது போன்ற விஷயங்களை எல்லாம் இப்போதும் பார்க்கிறோம். உளவு அமைப்புகள் பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பிறநாட்டுத் தலைவர்களும் சீனாவுக்கு சமமான குற்றவாளிகள்.



நியூசிலாந்து, தென் கொரியா, ஜெர்மனி போன்ற  சில நாடுகள் திறம்பட நடவடிக்கைகள் எடுத்து நோய்ப் பரவளைக் கட்டுப்படுத்தி உள்ளன.  அமெரிக்க அதிபருக்கு இந்த விவகாரம் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டாலும்,  விஷயத்தின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்குத் திறமை இல்லாதவர் அவர்.  Foxnews போன்ற வலது சாரி ஊடகங்கள்  இந்த நோயை ஒரு "புரளி" என்று சொல்லி வந்தன. எந்த ஒரு முன் நடவடிக்கையும் எடுக்கவில்லை.  மற்ற துறைகளைப் போலவே அமெரிக்க சுகாதாரத்துறையும் டிரைவர் இல்லாத பஸ்ஸாக ஓடிக்கொண்டிருக்கிறது.  போதாதற்கு அமெரிக்க மருத்துவ நிறுவனங்கள் இன்சூரன்ஸ் உள்ளவர்கள் மற்றும் பணக்காரர்களுக்கு மட்டுமே என்று மாறிப் போய் பல ஆண்டுகள் ஆகின்றன.  ஈசல்களைப் போல இறக்கும் அமெரிக்கர்களின் குருதி தற்போதைய அமெரிக்க அதிபரின் கைகளில் காயாமல் இருக்கும் .  வருங்காலத்தில்  அமெரிக்கா, இங்கிலாந்து  போன்ற நாடுகளில் சிறந்த ஆட்சியாளர்கள் வரும்போது சீனாவுக்கு எதிராகத் தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

இதில் ஏதும் சீனாவின் சதிவலை உள்ளதா?  கொஞ்சமாவது தர்க்கத்தை உபயோகிப்பவர்கள் சிரிப்பார்கள்.  சீனா தன் சந்தைப் பொருட்களையும் சேவைகளையும் விற்க மேற்கத்திய நாடுகளையே சார்ந்திருக்கிறது.  மற்ற நாடுகளின் பொருளாதாரம் அழிந்தால் சீனாவின் பொருளாதாரமும் அழியும்.  எல்லோரும் ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல்தான் உலகமயமான சந்தையின் முதல் விதி.

இப்போது பரவும் ஒரு வீடியோவில்,  zoom என்ற கம்பெனிக்காக இந்த சாதி நடந்ததாகக் கூறுகிறார்.  சீனாவின் GDP, 13 டிரில்லியனுக்கு மேல். இதில் zoom இன்றைய ஊதப்பட்ட மதிப்பே 30 பில்லியன்தான்.  அவர்களுக்கு இது கடுகுக்கு சமம்.  எத்தனையோ புரளிகள், அதில் இதுவும் ஒன்று என்று தள்ள வேண்டியது இது