Monday, June 14, 2010

இதையா நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்கிறோம்?




நேற்று மாலை என் மகளுடன் வீட்டின் அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்றிருந்தேன்.  அங்கே மணலை அளைத்துக் கதை சொல்லி விளையாடுவது 'கிண்டர்கார்டன் பட்டதாரி'யான  அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.   நேற்று அப்படித்தான், மலையிலிருந்து ஆறு இழிந்து வந்துப் பின்னர் கடலில் கலப்பது போல் ஒரு கதை சொன்னாள். " கடல் நீர் ஆவியாகி மேகமாகிறது.  பிறகு மலையில் பொழிந்து அங்கிருந்து ஆறு உருவாகி, அது கல்லையும் கரைத்துக் கொண்டு வந்து கடலில் சேர்கிறது.  பிறகு அந்தக்கடலில் இருந்து நிறைய எண்ணெய் வந்து, ஆமை, பெலிக்கன், மீன் எல்லாவற்றுக்கும் எண்ணெய்க் குளியல் நடக்கிறது.  ஏனென்றால் வாரா வாரம் எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பது நல்லது.."  அதை கேட்டதும் எனக்கு உடனே அதிர்ச்சியாகி விட்டது.  மெக்ஸிகோ குடாப்பகுதியில் இந்த பிரிட்டிஷ் பெட்ரோலியம் செய்த அட்டூழியம் இப்படி ஒரு சாதாரண இயற்கைச் சுழற்சியையே மாற்றிக் குழந்தைகளின் கற்பனையையும் எதிர்காலத்தையும் பாதித்திருக்கிறது.  அழிவின் விளிம்பில் நிற்கும் கடல்சார் உயிரினங்கள்தான் எத்தனை?  போதாதற்கு, கடலில் மிதக்கும் கச்சா எண்ணெயை சிதைக்க,  பூச்சி மருந்து போன்ற ஏதோ ஒரு ரசாயன நச்சுப் பொருளை ஏராளமான அளவில் கடலில் கொட்டியிருக்கிறார்கள்.  குறைந்த பட்சம் இந்த ஆண்டின் இறுதி வரைக்கும் கசிவை சரி செய்யா முடியாதாம். அவர்களையும் ஒன்றும் செய்ய முடியாது, காரணம் அரசாங்கமே அவர்கள் சட்டைப் பையில்.  நைஜீரியாவில் ஷெல் கார்ப்பரேஷன் செய்யும் கொடுமை அதைவிட அதிகம்.  இதற்கு மேல் ஒன்றும் எழுத முடியவில்லை.  நீங்களே செய்திகளைத் தேடித் படித்துக்கொள்ளுங்கள்.


Trackback:  எண்ணெய்க் கசிவு பற்றி ஏன் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதிலும் ஒரு செய்தியும் இல்லை?

Thursday, June 3, 2010

இன்னாது...... மன்னாப்பா..?

முன் குறிப்பு:  சமீபத்தில் 'காசேதான் கடவுளடா' பதினைந்தாவது முறை பார்த்த பாதிப்பில் சென்னையின் தேவபாஷையில் எழுதிப்பார்த்தது இது.  கட்டுரை யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடவில்லை. அப்படித் தோன்றினால் கம்பெனி பொறுப்பேற்காது.
 =======================
இதை தேங்காய் சீனிவாசன் சொல்வது மாதிரி கற்பனை செய்து கொள்ளுங்கள்..

சோமாரி ....மாரியப்பன் என்ன அடிச்சிட்டாண்டா!  கட்சிக் கூட்டத்துக்குக் கூப்டுக்க்னு போயி மானத்த வாங்கிடாங்கடா.  மொதல்லயே ரெண்டு தபா கூட்டத்துக்குக் கூப்ட்டு, பிரியாணி, சரக்கு, துட்டு எதுமே தராமா எமாத்திப்புடானுங்க. மாரியக் கேட்டா,