Saturday, April 6, 2019

யட்சப்ரஸ்னம்

காட்டில் நீர் கொண்டு வரச் சென்ற தம்பியர் நால்வரும் திரும்பி வராதது கண்டு கவலை கொண்டான் தர்மன்.
பலவாறாக சிந்தித்தபடியாக குளத்தை அடைந்தான். அங்கு இறந்து கிடந்த நால்வரையும் கண்டான்.  வனவாசம் முடியும் சமயத்தில் இப்படி ஒரு சோதனையா?
யார் இப்படி செய்திருப்பார்கள்? அருகில் சென்று பார்த்தான். உடலில் காயம் ஏதுமில்லை. உறங்குபவர்கள் போல் படுத்திருந்தனர்.
ஒருவேளை இது துரியோதனன் சதியாக இருக்கும் என எண்ணியபடி பொய்கையை கண்டான். தம்பிகளைப் பிறகு பார்க்கலாம், முதலில் தாக்கத்தை தணிக்கலாம் என்று பொய்கையில் இறங்கினான்.
அப்போது ஒரு அசரீரி,  "என் பேச்சைக் கேளாமல் உன் தம்பிகள் தண்ணீர் பருகினார்கள். நீயும் அப்படி செய்யாதே தர்மா.என்கேள்விகளுக்கு பதில் தந்துவிட்டு பிறகு குடி. இது என் குளம்" என்றது.
தர்மனும் தாகத்தை பொருட்படுத்தாமல் சரி கேள் என்றான்.  அசரீரி வரிசையாகக்  கேள்விக்கணைகளைத் தொடுத்தது.


யட்சன்:   எது சூரியனை உதிக்கச் செய்கிறது?
தருமர்:   எல்லாவற்றையும் மறந்து விட்டு மக்கள் போடும் ஓட்டு.

யட்சன்:  யார் அவனுக்குத் துணையாக இருக்கிறார்?
தருமர்:   கூட்டணிக்கட்சிகளும் பை நிறைய துட்டும்.
 
யட்சன்:  எது அவனை மறையச் செய்கிறது?
தருமர்:   இலைக்கட்சி கொடுக்கும் எக்கச்சக்கமான துட்டு.

யட்சன்:  எதில் அவன் நிலைபெற்றிருக்கிறான்?
தருமர்:   எவ்வளவு சம்பாதித்தாலும் காசை வெளியே எடுப்பதில்லை எனும் கொள்கையில்

யட்சன்:  எதனால் ஒருவன் கற்றவனாகிறான்?
தருமர்:   டிவி, செல்போன் சுவிட்ச் ஆப் செய்வதால்

யட்சன்:  எதனால் ஒருவன் பெரிய மகத்தான ஒன்றை அடைகிறான்?
தருமர்:   அவனுடைய தந்தை ஏற்கனவே அங்கே பெரிய பதவியில் இருப்பதால்.
 
யட்சன்:  ஒருவன் புத்திக்கூர்மையை எவ்வாறு அடையலாம்?
தருமர்:   பார்க்க கேள்வி  5.

யட்சன்:  அந்தணர்களுக்கு தெய்வீகம் எது?
தருமர்:   இப்போதைக்குத்  தாமரை .

யட்சன்:  க்ஷத்திரியர்களுக்கு தெய்வீகம் எது?
தருமர்:   வேறென்ன?  வெட்டுக் குத்துதான்.

யட்சன்:  வேள்விக்கான யஜுஸ் என்பது எது?
தருமர்:   கிடைக்கப் போகும் பதவியே  வேள்வியின் யஜுஸ் ஆகும்.

யட்சன்: இவ்வுலகில் செழிப்பை அடைய விரும்புவோருக்கு முதன்மையான மதிப்புடையது எது?
தருமர்:   மந்திரி மற்றும் அதிகாரிகள் கனெக்ஷன்.

யட்சன்:  பூமியை விடக் கனமானது எது?
தருமர்:   தேர்தல் முடிந்து ரிசல்ட்டுக்காக ஒரு மாதம் காத்திருப்பது

யட்சன்:  சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தது எது?
தருமர்:   சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தது பதவி

யட்சன்:  காற்றைவிட வேகமானது எது?
தருமர்:   காற்றைவிட வேகமானது இணையம் மூலம் பரவும் வீடியோ
 
யட்சன்:  புற்களைவிட எண்ணிக்கையில் அதிகமானது எது?
தருமர்:   புற்களை விட எண்ணிக்கையில் அதிகமானது  இணையம் மூலம் பரவும் மீம்ஸ்
 
யட்சன்:  பிறந்த பிறகும் நகராதது எது?
தருமர்:   பிறந்தும் நகராமல் இருப்பது மக்கள்  நலனுக்கான சட்டங்கள் 

யட்சன்:  இதயம் இல்லாதது எது?
தருமர்:   அரசு நிறுவனங்கள், மற்றும்  நீதிமன்றங்கள்  

யட்சன்:  நாடு கடத்தப்பட்டவனுக்கு {வனவாசம் மேற்கொள்பவனுக்கு} யார் நண்பன்?
தருமர்:   நாடுகடத்தப்பட்டவனுக்கு{வனவாசம் மேற்கொள்பவனுக்கு} இணையமே நண்பன்.
 
யட்சன்:   இல்லறத்தானுக்கு யார் நண்பன்?
தருமர்:   இல்லறத்தானுக்கு நண்பன் அவனது டிவி ரிமோட்

யட்சன்:  சாகப்போகிறவனுக்கு யார் நண்பன்?
தருமர்:   சாகப்போகிறவனுக்கு நண்பன் இன்சூரன்ஸ் ஏஜென்ட்

யட்சன்:   நித்திய கடமை என்பது யாது?
தருமர்:   படிக்காமல் உடனே ஃபார்வேர்ட் பண்ணுவது 
 
யட்சன்:  எவன் தனியாக உலவுகிறான்?
தருமர்:   கையில் ஃபோன் வைத்திருக்கும் எவருமே

யட்சன்:  பிறந்தவன் எவன் மீண்டும் பிறக்கிறான்?
தருமர்:   ஒரு மாதத்துக்கு முன் அனுப்பிய ஃபார்வேர்ட்
 
யட்சன்:  பெரிய களம் எது?
தருமர்:   இந்தியத் தேர்தல் களம்
 
யட்சன்:  மனிதனுடைய ஆன்மா எது?
தருமர்:   அவன் பேங்க் அக்கவுண்ட்
 
யட்சன்:  தேவர்களால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட நண்பன் {துணை} யார்?
தருமர்:   தெரியவில்லை.  கிடைத்தால் அடி, உதை  நிச்சயம்

யட்சன்:   மனிதனுக்குத் தலையாய ஆதரவு {பிழைப்புக்கான கருவி} எது?
தருமர்:   அவனுடைய வாய்

யட்சன்:  லாபங்கள் அனைத்திலும் எது சிறந்தது?
தருமர்:   லாபங்கள் அனைத்திலும் சிறந்தது ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையே

58) உலகத்தில் உயர்ந்த கடமை {அறம்} எது?
தருமர்:   வந்ததை உடனே ஃபார்வேர்ட் செய்வது

யட்சன்:  கூட்டணியை {நட்பை} உடைக்காதவர்கள் (முறிக்காதவர்கள்) யார்?  (ஒரிஜினல் )
தருமர்:   நல்லோருடன் கூட்டணி {நட்பு} எப்போதும் உடையாததாகும் (முறியாததாகும்)

யட்சன்:  எது துறக்கப்படுவதால், ஒருவன் மற்றவர்களால் ஏற்கப்படுகிறான்?
தருமர்:   பெட்டி (திறக்கப்படுவது என்று திருத்திக் கொள்ளவும் )

யட்சன்:  எது துறக்கப்பட்டால், ஒருவன் வளமானவன் ஆகிறான்?
தருமர்:   வருமானவரித்துறை, சிபிஐ ஆகிய ரெயிடுகளைத் துறந்தால், ஒருவனை வளமானவனாக்குகிறது
 
யட்சன்:  பணியாட்களுக்கு {வேலைக்காரர்களுக்கு} எதற்காக {கொடுக்க வேண்டும்}?
தருமர்:   தொழிலாளர் சட்டம் என்று ஒன்று இருப்பதால் 
 
யட்சன்:  மன்னனுக்கு எதற்காக {கொடுக்க வேண்டும்}?
தருமர்:   அச்சத்தில் இருந்து நிவாரணம் பெற.(ஒரிஜினல் )
 
யட்சன்:  நண்பர்கள் கைவிடப்படுவதற்குக் காரணம் எது?
தருமர்:   கட்சித் தகராறு மற்றும் கட்டிங் தகராறு

யட்சன்:  ஒரு நாடு எதனால் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்?
தருமர்:   நாள் முழுதும் சமையல் சேனல் பார்த்து விட்டு, சாப்பாட்டுக்கு வெளியே செல்பவர்களால்.

யட்சன்:  வழி என்பது எது?
தருமர்:   ஊருக்குப் புதிய ஆளை, சென்னை ஆட்டோ டிரைவர் அழைத்துப் போகும் வழி எதுவோ அதுவே வழி

யட்சன்:  உணவு எது?
தருமர்:   பசுவே உணவு ( சண்டைக்கு வராதீர்கள். இது உண்மையாகவே மஹாபாரதத்தில் இருக்கிறது )
 
யட்சன்:  ஞானம் என்று சொல்லப்படுவது எது?
தருமர்:   டிவி சேனல்கள் சொல்வதே உண்மையான ஞானமாகும்.
 
யட்சன்:  அமைதி எது?
தருமர்:   மேற்படி டிவியை அணைத்து வைப்பதே உண்மையான அமைதி
 
யட்சன்:  கருணை எது?
தருமர்:   அனைத்து  டிவி சீரியல்களையும் தடை செய்வதே கருணை

யட்சன்:  வெல்லப்படமுடியாத எதிரி எது?
தருமர்:   உள்கட்சி மற்றும் கூட்டணி சண்டையில் முதுகில் குத்துபவரே வெல்லப்பட முடியாத எதிரி
யட்சன்:  எவ்வகை மனிதன் நேர்மையானவன்?
தருமர்:   நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்

யட்சன்:  அறியாமை என்பது எது?
தருமர்:   தனக்கு வரும் forwardம் போன வாரம் தான் அனுப்பியதுதான் என்று அறியாததே உண்மையான அறியாமை
 
யட்சன்:  சோம்பலெனப் புரிந்து கொள்ளப்படுவது எது?
தருமர்:   நாள்கணக்கில் இணையத்தில் உலவாமல் இருப்பது சோம்பலாகும்
 
யட்சன்:  எவன் நாத்திகன் ?
தருமர்:   உள் பனியனுக்குள் விபூதியைப் பூசுகிறவன்
 
யட்சன்: எது ஆசை என்று அழைக்கப்படுகிறது? மற்றும் ஆசையின் ஊற்றுக்கண் எது?
தருமர்:   Forward அனுப்பி விட்டு Likes எதிர்பார்ப்பது 
 
யட்சன்: அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன ஒன்றுக்கொன்று எதிரானவை. இப்படி ஒன்றுக்கொன்று பகையானவை எப்படி இணைந்து இருக்க முடியும்?
தருமர்:   கூட்டணிக் கட்சிகள் ஒரே நாளில் எல்லாவற்றையும் மறந்து விட்டு இணைந்து செயல்படுவதில்லையா?  அது போலத்தான் இது. 
 
யட்சன்:  நிறைய நண்பர்களை உடையவன் அடையும் லாபம் என்ன?
தருமர்:   பல நண்பர்களை உடைய ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான். ( ஒரிஜினல் )

யட்சன்: எவன் சந்தோஷத்தை அடைகிறான்?
தருமர்:   என் பதிவுகளை படித்து விட்டு உடனடியாக ஷேர் செய்பவன் சந்தோஷமடைகிறான்.

யட்சன்: எது ஆச்சரியம்?
தருமர்: தேர்தலில் வென்றவர்கள் யாரும் அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தம்மை சீந்தப் போவதில்லை என்பதை அறிந்தும், அவர்களுக்காகத் தலைமுறை தலைமுறையாக உழைத்து, வாழ்நாளைக் கழித்து விடுகிறார்களே தொண்டர்கள் - அதுதான் ஆச்சரியம்.


தருமனின் இந்த பதில்களால் மெர்சலாகிப் போன யட்சன், "இந்த ஊரே எனக்கு வேண்டாண்டா சாமி" என்று தர்மனின் காலில் விழுந்தான்.

No comments:

Post a Comment