பொதுவாகவே குஜராத்திகள் வியாபாரத்தில் சிறந்தவர்கள்.
பெரிய முதலீடுகள் அங்கு குவிந்து முதல்வர் மோடிக்கு நல்ல பெயர் வாங்கித்
தந்தது. பத்திரிகைகளும் அவருக்கு ஒரு பெரிய இமேஜை உருவாக்கி வைத்தது.
சிலிக்கன் வேலி பணக்காரர்கள் வித்தியாசமானவர்கள். ஹோட்டல் சர்வருக்கான
டிப்ஸை, ஐபோன் ஆப் உபயோகித்துப் பிரித்துக் கொள்வார்கள், ஆனால்
இந்தியாவிலிருந்து ஏதாவது சாமியார் வந்தால் கணக்குப் பார்க்காமல் பணத்தை
அள்ளி இறைப்பார்கள். மோடி ஒரு தீவிர இந்துக் காவலர் என்று அவர்களுடைய
புத்தியில் ஏற்றப்பட்டது. குஜராத்தில் அவருடைய வீர சாகஸங்களைப்
பார்த்தவர்கள், அவரை எப்படியும் மேலுக்கு கொண்டு வர தம்முடைய பங்கும்
பெருமளவு இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
Tuesday, May 21, 2019
Saturday, April 6, 2019
யட்சப்ரஸ்னம்
காட்டில் நீர் கொண்டு வரச் சென்ற தம்பியர் நால்வரும் திரும்பி வராதது கண்டு கவலை கொண்டான் தர்மன்.
பலவாறாக சிந்தித்தபடியாக குளத்தை அடைந்தான். அங்கு இறந்து கிடந்த நால்வரையும் கண்டான். வனவாசம் முடியும்
சமயத்தில் இப்படி ஒரு சோதனையா?
யார் இப்படி செய்திருப்பார்கள்? அருகில்
சென்று பார்த்தான். உடலில் காயம் ஏதுமில்லை. உறங்குபவர்கள் போல்
படுத்திருந்தனர்.
ஒருவேளை இது துரியோதனன் சதியாக இருக்கும் என எண்ணியபடி
பொய்கையை கண்டான். தம்பிகளைப் பிறகு பார்க்கலாம், முதலில் தாக்கத்தை தணிக்கலாம்
என்று பொய்கையில் இறங்கினான்.
அப்போது ஒரு அசரீரி, "என் பேச்சைக் கேளாமல் உன் தம்பிகள்
தண்ணீர் பருகினார்கள். நீயும் அப்படி செய்யாதே தர்மா.என்கேள்விகளுக்கு பதில்
தந்துவிட்டு பிறகு குடி. இது என் குளம்" என்றது.
தர்மனும் தாகத்தை பொருட்படுத்தாமல் சரி கேள் என்றான். அசரீரி வரிசையாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தது.
Saturday, March 30, 2019
செய்திகளை முந்தித் தருவது
எத்தனை
வேலை இருந்தாலும் தினமும் எதிரெதிர் செய்தித் தாள்களை மொழிக்கு இரண்டு
வீதம் வேகமாகப் படித்து விடுவது வழக்கம். இதனால் ஏதும் பயனுண்டா என்று
கேட்டால் , நிச்சயம் இல்லை. யோசித்துப் பார்த்தால் நியூஸ் பேப்பர்
படிக்கும் இந்தப் பழக்கம் நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும் போது
ஆரம்பித்தது. சென்னை சைதாப்பேட்டையில் என் பாட்டி வீட்டில் தங்கிப்
படித்துக் கொண்டிருந்தேன். அங்கிருக்கும் திரௌபதி அம்மன் கோயில்தான்
எங்களுக்கு விளையாடுமிடம்.
மாலையில்
யாரும் வரமாட்டார்கள். அதன் பக்கத்திலேயே என் பெரியப்பாக்களில் ஒருவர் ஒரு
சிறிய லென்டிங் லைப்ரரி நடத்தி வந்தார். சிகரெட் புகைப்பதற்கோ எதற்கோ
போவதற்காக என்னை தினமும் சிறிது நேரம் அந்த லைப்ரரியில் காவலுக்கு உட்கார
வைத்து விட்டுப் போவார். அப்போது அங்கிருக்கும் நியூஸ் பேப்பர் மற்றும்
காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பேன்.
Subscribe to:
Posts (Atom)