ஈ.எஸ்.பி.என், மற்றும் ஸ்பானிஷ் சானலில்தான் பார்க்க முடிந்தது. உலகம் முழுக்கப் பிடித்ததை இவர்கள் மட்டும் பிடிவாதமாகப் பார்க்க மாட்டார்கள். பூனை கண்ணை மூடியது போல். போதாதற்கு, பெரிய சானல்கள் சில ஹைஸ்கூல் பேஸ்பால், கால்ப் போன்றவற்றை அதே நேரத்தில் நேரடியாக ஒளிபரப்பி வெறுப்பேற்றினார்கள்.
தென்னமெரிக்க அணியினர்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி, சீலேவுக்கு எதிராக ஆடும்போது மட்டும் நன்றாக ஆடியது. பிற போட்டிகளில் மிகவும் சொதப்பல். வட கொரியாவுடன் கூட ஒரே ஒரு கோல் வித்தியாசத்தில்தான் வென்றார்கள். இத்தனைக்கும் முன்னணி மற்றும் 'மிட் பீல்ட்' எல்லாம் நல்ல ஆட்டக்காரர்கள். ஊருக்குப் போனதும் இவர்களுக்கு உதை நிச்சயம். பிரேசில், மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினா அணிகளின் கோலிகள் சிபாரிசு மூலம் வந்தார்களா என்று தெரியவில்லை. எவ்வளவு கோல் அடித்தாலும் வாங்கிக்கொள்கிறார்கள். மெக்சிகோவின் பார்வேர்ட் சாண்டோஸ் (http://www.fifa.com/worldcup/
நான் பார்த்த வரையில் தென்னமெரிக்க அணிகளில் உருகுவே மிகப் பிரமாதமாக ஆடியது. எந்தத் தவறும் செய்யாத அவர்கள், கானாவுக்கு எதிரான ஆட்டத்தில், நியாயமான கோலை, முன்னணி வீரர் சுவாரேஸ் கையால் தடுத்ததால் எல்லோருடைய வயிற்றெரிச்சலையும் வாங்கிக் கொண்டார்கள். மற்றபடி அவர்களது ஆட்டம் அபாரம். அந்த அணியின் டியாகோ போர்லன் (http://www.fifa.com/worldcup/
ஆசிய, ஆப்பிரிக்க, பிற அணிகள்
தென் ஆப்ரிக்கா அணிக்கு ஹோம் பிட்ச் உதவவில்லை. எல்லோரும் எதிர்பார்த்த நைஜீரியா மற்றும் கேமரூன் அணிகள் கொஞ்சம் கூட சோபிக்கவில்லை. நைஜீரிய அணியில் ஏதோ பண விளையாட்டு என்று பேசிக்கொண்டார்கள். கானா மட்டும் சென்ற கோப்பையைப் போலவே மிகவும் சிறப்பாக ஆடினார்கள். அந்த உருகுவே வீரர் கையால் கோலைத் திருடாமல் இருந்திருந்தால், இறுதிச் சுற்றுக்குகூட வந்திருப்பார்கள். கானாவின் பழைய நாயகன் முன்ட்டாரி கொஞ்ச நேரம் திரும்ப வந்துத் தம் மேஜிக்கைக் காட்டினார். வழக்கம் போல யு.எஸ் அணி இந்த முறையும் கானாவிடம் உதை வாங்கிச் சென்றது. அப்போது மட்டும் இங்கே தொலைக்காட்சிகளில் ஏழு வினாடிகள் இந்தப் போட்டியைப் பற்றி செய்தி சொன்னார்கள்.
ஜப்பான் ஆட்டம் முழுவதும் தடுப்பு ஆட்டமே ஆடிக் கடைசியில் பெனால்ட்டியில் உயிரை விட்டது. அதன் முன்னணி வீரர் ஹோண்டாவுக்குப் பிரகாசமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தென் கொரிய அணியும் எதிரணிகளுக்கு மிகுந்த சவாலாக அமைந்தது. அடுத்த முறை இன்னும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள் போலிருக்கிறது. நியூசிலாந்து, ஆச்சரியத்தை அளித்த மற்றோர் அணி. அவர்களது கோலி, பந்துகளை அபாரமாகத் தடுத்தார்.
ஐரோப்பிய அணிகள்
சென்ற கோப்பையின் சாம்பியன்கள் இத்தாலி மற்றும் பிரான்ஸ் இம்முறை முதல் சுற்றிலேயே வெளியேறி விட்டார்கள். விமானத்துக்கு தள்ளுபடி விலையில் டிக்கெட் கிடைத்திருக்கும் போலிருக்கிறது. ரசிகர்கள் பெரிதும் நம்பி ஏமாந்த இன்னோர் அணி இங்கிலாந்து. ஜெர்மனியிடம் கைப்பிள்ளைக் கணக்கை உதை வாங்கிகொண்டு வண்டி ஏறினார்கள். ஸ்லோவேனியா, ஸ்லோவேக்கியா போன்ற அணிகள் எதிர்பார்ப்பு இல்லாமாலேயே நன்றாக விளையாடினார்கள். நிபுணத்துவத்துடன் விளையாடிய ஐரோப்பிய அணி ஜெர்மனிதான். எல்லாம் ரேசர் முனை போல் துல்லியமான பாஸ்கள். வெகு இளமையான அணி. இதில் அநேகம் பேர் அடுத்த போட்டிக்கும் வருவார்கள். அரை இறுதியில் ஏனோ ஸ்பெயினிடம் இவர்களது தந்திரங்கள் பலிக்கவில்லை. போன முறை போலவே மூன்றாவது இடத்தோடு நின்று விட்டார்கள். நான் முன்பே சொன்னதுபோல நெதர்லாந்து அதிர்ஷ்டத்தின் துணையோடுதான் இறுதிச் சுற்றுக்கு வந்தார்கள். அவர்களது அழுகுணி ஆட்டம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். ஸ்பெயின் வீரர்கள் நேர்மாறாக ஆர்வத்தோடும் காதலோடும் விளையாடினார்கள். நல்ல டீம் ஸ்பிரிட். முதல் சுற்றில் ச்விட்சர்லாந்திடம் தோற்றதும் உடனே சுதாரித்துக் கொண்டார்கள். இதுதான் அவர்களுக்கு முதல் உலகக் கோப்பை. போராடித்தான் வென்றார்கள். அத்துடன் 'Fair Play ' விருதும் வென்றார்கள்.பாராட்டுக்குரியவர்கள்.
அதே சமயம், 110 கோடி ஜனத்தொகை கொண்ட, உடலை வருத்தும் எந்த விளையாட்டையும் விளையாடாத, இந்தியா இந்தப் போட்டிகளில் தகுதி ஆட்டங்களில் கூட விளையாடத் தகுதி பெறவில்லை. ஒரு வேளை வந்திருந்தால் ஐம்பது வயதுக்குக் குறையாத அதே ஆட்டக்காரர்கள் வந்திருப்பார்கள். அதில் அசாருதீன் போல பலர் அங்கேயும் ஐநூறு கோடிக்குக் குறையாமல் அடித்திருப்பார்கள். வேண்டுமானால் பாலிவுட்டில், காதல், காமெடி, காதல், சண்டை, காதல், ஐஸ்வர்யா ராய், ஷில்பா ஷெட்டி, எல்லாம் கலந்து ஒரு படம் எடுக்கலாம். கடைசி ஐந்து நிமிடத்தில் சல்மான் கான் சட்டையில்லாமல் வந்து ஐந்து கோல் போடுவது போல. பிறகு கொடி போர்த்திக் கொண்டு ஒரு தேச பக்திப் பாடல்.
என் போன்றோரைப் பரவசத்தில் ஆழ்த்திய கால்பந்து வீரர்கள், ஜெர்மனியின் க்லோசே, நெதர்லாந்தின் ச்நேய்டர், ஸ்பெய்னின் டேவிட் வீலா, புயோல், இனியெஸ்டா, காசிலாஸ், உருகுவே போர்லான், அர்ஜென்டினா மெஸ்ஸி, நீங்கள்தான் நிஜ 'உலக நாயகர்கள்'.
பி.கு: சீரியல்கள் மட்டுமே பார்க்கும் மகளிர் மத்தியில், என்னை விட சுவாரஸ்யமாக அனைத்துப் போட்டிகளையும் ரசித்துப் பார்த்த என் மனைவிக்கு நன்றி.
1 comment:
சுவாரஸ்யமான பதிவு.
Post a Comment