Monday, June 14, 2010

இதையா நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்கிறோம்?
நேற்று மாலை என் மகளுடன் வீட்டின் அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்றிருந்தேன்.  அங்கே மணலை அளைத்துக் கதை சொல்லி விளையாடுவது 'கிண்டர்கார்டன் பட்டதாரி'யான  அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.   நேற்று அப்படித்தான், மலையிலிருந்து ஆறு இழிந்து வந்துப் பின்னர் கடலில் கலப்பது போல் ஒரு கதை சொன்னாள். " கடல் நீர் ஆவியாகி மேகமாகிறது.  பிறகு மலையில் பொழிந்து அங்கிருந்து ஆறு உருவாகி, அது கல்லையும் கரைத்துக் கொண்டு வந்து கடலில் சேர்கிறது.  பிறகு அந்தக்கடலில் இருந்து நிறைய எண்ணெய் வந்து, ஆமை, பெலிக்கன், மீன் எல்லாவற்றுக்கும் எண்ணெய்க் குளியல் நடக்கிறது.  ஏனென்றால் வாரா வாரம் எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பது நல்லது.."  அதை கேட்டதும் எனக்கு உடனே அதிர்ச்சியாகி விட்டது.  மெக்ஸிகோ குடாப்பகுதியில் இந்த பிரிட்டிஷ் பெட்ரோலியம் செய்த அட்டூழியம் இப்படி ஒரு சாதாரண இயற்கைச் சுழற்சியையே மாற்றிக் குழந்தைகளின் கற்பனையையும் எதிர்காலத்தையும் பாதித்திருக்கிறது.  அழிவின் விளிம்பில் நிற்கும் கடல்சார் உயிரினங்கள்தான் எத்தனை?  போதாதற்கு, கடலில் மிதக்கும் கச்சா எண்ணெயை சிதைக்க,  பூச்சி மருந்து போன்ற ஏதோ ஒரு ரசாயன நச்சுப் பொருளை ஏராளமான அளவில் கடலில் கொட்டியிருக்கிறார்கள்.  குறைந்த பட்சம் இந்த ஆண்டின் இறுதி வரைக்கும் கசிவை சரி செய்யா முடியாதாம். அவர்களையும் ஒன்றும் செய்ய முடியாது, காரணம் அரசாங்கமே அவர்கள் சட்டைப் பையில்.  நைஜீரியாவில் ஷெல் கார்ப்பரேஷன் செய்யும் கொடுமை அதைவிட அதிகம்.  இதற்கு மேல் ஒன்றும் எழுத முடியவில்லை.  நீங்களே செய்திகளைத் தேடித் படித்துக்கொள்ளுங்கள்.


Trackback:  எண்ணெய்க் கசிவு பற்றி ஏன் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதிலும் ஒரு செய்தியும் இல்லை?

8 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சோகம் தாங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

http://thekkikattan.blogspot.com/2010/06/blog-post_14.html இந்தா இவரும் சோகக்கதைய எழுதி வச்சிருக்கார் பாருங்க..

Thekkikattan|தெகா said...

ஆமாங்க பெரிய அநியாயம் பண்ணுறாய்ங்க அதே கேள்விய கேட்டுத்தான் நானும் விரிவா ஒரு பதிவு போட்டுருக்கேன்.

முத்துலெட்சுமி என்னோட சுட்டியை இங்கு இணைச்சதற்கு நன்றிங்கோவ்...

ஜெகதீஷ் குமார் said...
This comment has been removed by the author.
ஜெகதீஷ் குமார் said...

சமூகப் பொறுப்புள்ள நல்ல பதிவு. சுற்றுச் சூழல் பற்றி அக்கறை காட்டும் உலகத்தலைவர்கள் இதுமாதிரி அத்து மீறல்களைக் கண்டுகொள்கிறார்களா என்று தெரியவில்லை.

நானானி said...

குழந்தைகளுக்கு நாம் காட்டும் வழி இதுதான் போலும். ஆனாலும்குழந்தையின் கற்பனை திறன் அருமை.

சி. கருணாகரசு said...

உலகம் பயணப்படுகிறது தன் அழிவை நோக்கி.

பிரதீபா said...

கொஞ்ச கொஞ்சமா உலகம் அழியும்ன்னு நெனச்சிட்டு இருப்போம்..இந்த மாதிரி அநியாயத்தால திடீர்ன்னு பெரிசா எதாச்சும் வரும், அப்போ புரியும் எல்லாருக்கும்.

Post a Comment