Thursday, June 3, 2010

இன்னாது...... மன்னாப்பா..?

முன் குறிப்பு:  சமீபத்தில் 'காசேதான் கடவுளடா' பதினைந்தாவது முறை பார்த்த பாதிப்பில் சென்னையின் தேவபாஷையில் எழுதிப்பார்த்தது இது.  கட்டுரை யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடவில்லை. அப்படித் தோன்றினால் கம்பெனி பொறுப்பேற்காது.
 =======================
இதை தேங்காய் சீனிவாசன் சொல்வது மாதிரி கற்பனை செய்து கொள்ளுங்கள்..

சோமாரி ....மாரியப்பன் என்ன அடிச்சிட்டாண்டா!  கட்சிக் கூட்டத்துக்குக் கூப்டுக்க்னு போயி மானத்த வாங்கிடாங்கடா.  மொதல்லயே ரெண்டு தபா கூட்டத்துக்குக் கூப்ட்டு, பிரியாணி, சரக்கு, துட்டு எதுமே தராமா எமாத்திப்புடானுங்க. மாரியக் கேட்டா,
இத்தெல்லாம் பீட்டராண்ட கேளுன்னு சொல்றான்.  பீட்ட்ரத் தேடித் போனாக்கா, [][][], கண்லையே பட மாட்ட்றான்.  இவனாண்ட கேட்டா அவன்ட்ட கேளுன்றான்.  அவனாண்ட கேட்டா இவன்ட்ட கேளுன்றான்.   எதுக்குடா வேல ம...ரல்லாம் உட்டுட்டு, பொண்டாட்டி உண்டில வச்சிருந்த துட்ட எட்த்துக்குனு ரிக்ச்சா புட்சிக்னு வந்து, பாராத்திரி வரிக்கும் கட்சி ஆப்பீஸ் வராண்டாவுல உக்காந்துருக்கேன்?  என்னமாரியே பலான பலான ஊர்லந்துல்லாம் கட்சிக்காரனுங்க வந்துருக்கானுங்க, ஆருமே தூங்கல. ஒரு கட்டிங்குக்குத்தான் துப்பில்ல,  சிங்கிள் டீயாவது குடுக்கக் கூடாது?  மாரியப்பனத் தேடுனா, உள்ள தலைவருங்க தங்கற ஏ.சி. ரூம்ல தூங்கறான்னு சொல்றாங்க.  அப்பால கோயி கூவறதுக்கு முன்னால எழுந்து வரான்.   அவுனுக்கு எவ்ளோ வேலயோ..  முன்னாலேயே ஒரு தபா துட்டு குடுக்காம ஏமாத்தனான்னு பிட் நோட்டீஸ் அட்ச்சி வுட்டதுக்குப் பின்னால, மாரியப்பன் சொன்னான், ஆளுங்களக் கூட்டியார்ரத்துதான் அவனோட வேலையாம்,  துட்டு மேட்டர்லாம் பீட்டர்தான் இன்-சார்ஜாம். அப்பால பீட்டர்ட்ட சொல்லி துட்டு வாங்கித்தர்றதா சொன்னான்.  

அங்காளம்மன் கோயில்ல குறி சொல்ற துலுக்காணம் பூசாரிக்கு கிராக்கிப் புடிச்சுக் குடுக்கறதுக்கு நம்ம குடிசை வாசல்ல தெனம் வால் போஸ்டர் அடிச்சி ஒட்டனனே நெனப்பு இருக்குதா?   பத்தாதக்கு நம்ம குப்பத்து ஜெனங்க, நம்ம கூட்டாளிங்க அல்லார்த்டையும் கேன்வாஸ் பண்ணனே.  நம்ம பேச்சக் கேட்டு எத்தினிப் பேரு போனாங்க?  தெனம் செவுத்துல எவ்ளோ எழுதி வச்சேன்?  அவுரு குறி சொல்றது அப்பிடியே நடக்குது.  சும்மா விபீதி குட்த்தாலே எல்லா நோவும் பூடுது, காலத் தொட்டாக் கால் வலி பூடுது, .... , அப்டி, இப்டின்னு, ரீல் உட்டனே நெனப்பு இருக்கா?  அந்தப் பொறம்போக்கு பூசாரி இப்டி பப்ளிக்கா  பொம்பள வெவகாரத்துல மாட்டுவான்னு கண்டனா?  செவுத்துல எய்தன்து அல்லாத்தையும் சுண்ணாம்பு பூசி அழிச்சாலும்,  கண்ட கண்ட பேமானிங்க சும்மா சும்மா வந்து டார்ச்சர் பண்றானுங்க.

போன வாரம் கச்சி ஆப்பீஸ் போனப்ப, இந்த பிட் நோட்டீஸ் வெவகாரத்த பீட்டரு செம காண்டுல மனசுல வெச்சிருந்தான் போல இருக்குது.  அத்தினி பெருக்கு மத்தில மாரியப்பன் என்னப் பாத்துக் கேக்கராம்ப்பா...  அப்டியே டென்சன் ஆயிடிச்சி.  "இன்னாபா கபாலி,  ரிக்ச்சால போவவே துட்டு இல்லாத நீயே அவ்ளோ துட்ட அந்த பூசாரியாண்ட வுட்டேன்னு சொல்றியே, நம்பறா மாறியா இருக்குது?  உங்க குப்பத்து ஆளுங்க இத்தினி பேர அந்த டுபாக்கூர் பூசாரிகிட்ட தள்ளி வுட்டியே, அந்த கலீக்சன்ல ஒனக்கு சில்ற தேறுச்சா?    அது போனாப் போவுது,  அட, இவ்ளோ பெரு நம்ம கூமுட்ட வேலையால கவுந்தாங்களே, அவுங்கள்ட்ட மன்னாப்பு கேக்கறியா...."  அப்டீன்னு மானாவரியாக் கேட்டாம்பா.  மன்னாப்பு கேக்கற ஜாதியா நானு?   நானே தெரிஞ்சி தப்பு செஞ்சாலும் மத்தவங்கதான எங்கிட்ட மன்னாப்பு கேக்கணும்?  இருந்தாலும் வேற வழியில்லாம மன்னாப்பு கேட்டன்.  நம்ம ஹார்ட்டு  பியூர் கோல்டுப்பா.  அப்பாலதான் தெரிஞ்சிது, இந்த மாரியப்பன் ஒரு டம்மி பீசு,  ரூம்ல பின்னால குந்திகினு இருந்த பீட்டருதான் எல்லாத்தையும் இவனாண்ட எட்த்து உட்ருக்கான்னு.

நம்ம சிஸ்யனுங்க மன்னாரு, டில்லி, ஜாம்பேட்ட ஜக்கு, ஆய்வார்ப்பேட்ட அலெக்சு, கோயம்பேடு கோயிந்தன், பக்கிரி, அல்லாருக்கிட்டியும் ஒரு எல்ப்பு கேட்டுக்கிறேன்.   நீங்க அல்லாரும், அவங்கவங்க வூட்டாண்ட இருக்குற செவுரு, திண்ண, தட்டி, எல்லாத்துலயும் 'நம்ம தலிவரு கபாலி ஒரு நல்லவரு, வல்லவரு..' அப்டீன்னு எயுதி வெய்யுங்க.   அவுனுங்களுக்கு சப்போட்டுக்கு கச்சி ஆப்பீஸ்ல ஆளுங்க இருக்குது.  மைக்கு வெச்சுக் கூவுனா எல்லா பேட்டைக்கும் கேக்கும்.  என்ன மாறி அன்னக் காவடிக்கு நீங்கதாம்பா இருக்கீங்க, ஆமா, சொல்லிக்கிணன்.

"ஏம்ப்பா கபாலி, ஒரு தபான்னாச்சும், நாந்தான் தப்புப் பண்ணிட்டன் னு உண்மைய ஒத்துக்கியம்பா.." அப்டீன்னு கேனப்பசங்க ஒண்ணு ரெண்டு பேரு சொல்றானுங்க. 'கிளை வட்டச்செயலாளர்'-ன்னு நீ போட்டுக்கினு இருக்கீயே பளபளன்னு  சொக்கா, அந்த மாறி சொக்காய ரொம்பப் பேரு போட்டுக்கினு இருக்காங்க.  வெறுஞ்சொக்காய்லையா மருவாதி இருக்குது?  அத்தப் போட்டுக்குனு நெஜத்தப் பேசணும்பா.  சும்மா ரீல் சுத்தறவனுங்கல்லாம் அந்த சொக்காவப் போடக்கூடாது.....'  அப்டீன்னு ஒரே வள வளன்னு ரோஜன சொல்றானுங்க.  அவுனுங்களுக்கு இன்னா வந்துது? எம் பிரச்ன ஏன்னா தெரியும்.  எங்குடிசைல நான் வளக்கற ரெண்டு நாயிங்களுக்கு ஆவுதுப்பா அவ்ளோ செலவு.  சொல்ல வந்துட்டானுங்க பெருசா..

கண்ணம்மா பேட்ட கன்சாமி  கேக்கறான் , ' அண்ணாத்த, அதான் கச்சி ஆபீஸ் போனாக்கா ஒரு மயிராதையும் தர்றதில்ல, அப்புறம் எதுக்கு சும்மா சும்மா அங்க போறன்னு..' இத்த வுட்டா வேற எங்கடா நாம் போறது?  இருக்கறதே ரெண்டே  ரெண்டு  பெரிய கச்சிங்கதான். இங்க தொரத்துனா அங்க, அங்க தொரத்துனா இன்ன்கன்னு மாறி மாறி போயிக்கினே இருக்கணும்.  ரொம்ப முடியலன்னா இந்தப் பேட்டைய உட்டுட்டு வேற பேட்டக்கிப் போயிடுவேன்.  எதுக்குப் பால்மாறாம அங்க போறன்னு கேக்குற அல்லாருக்கும் சொல்லிக்கிறன்.... அல்லாம் ஒரு அல்ப்ப ஆசதான், அடிக்கடி கச்சி ஆபீஸ்ல மூஞ்சக் காட்னாக்கா, அப்பால  எதுக்காவுது யூஸ் ஆவுமின்னுதான்.  பின்னால எலக்சன், பேரணி, அப்டீன்னு கலெக்சன் ஆவுமில்ல?   எத்தன தடவ மானம் போனாலும் நான் அங்க போவேன்.  அப்புறம் யார் எனுக்கு கேரண்டியா வாங்கித் தருவான் சரக்கு.  எனக்கு முக்கியமா வோணும் சரக்கு, சரக்கு, சரக்கு, சரக்கு, சரக்கு, சரக்கு, சரக்கு, சரக்கு, சரக்கு, சரக்கு, சரக்கு, சரக்கு, சரக்கு, சரக்கு சரக்கு, சரக்கு, சரக்கு, சரக்கு...

7 comments:

ப.கந்தசாமி said...

இதப்படிச்சா ஒருத்தரு ஞாபகமும் வல்லியே?

Raja M said...

"அங்காளம்மன் கோயில்ல குறி சொல்ற துலுக்காணம் பூசாரிக்கு கிராக்கிப் புடிச்சுக் குடுக்கறதுக்கு நம்ம குடிசை வாசல்ல தெனம் வால் போஸ்டர் அடிச்சி ஒட்டனனே நெனப்பு இருக்குதா? பத்தாதக்கு நம்ம குப்பத்து ஜெனங்க, நம்ம கூட்டாளிங்க அல்லார்த்டையும் கேன்வாஸ் பண்ணனே. நம்ம பேச்சக் கேட்டு எத்தினிப் பேரு போனாங்க? தெனம் செவுத்துல எவ்ளோ எழுதி வச்சேன்? அவுரு குறி சொல்றது அப்பிடியே நடக்குது. சும்மா விபீதி குட்த்தாலே எல்லா நோவும் பூடுது, காலத் தொட்டாக் கால் வலி பூடுது, .... , அப்டி, இப்டின்னு, ரீல் உட்டனே நெனப்பு இருக்கா? அந்தப் பொறம்போக்கு பூசாரி இப்டி பப்ளிக்கா பொம்பள வெவகாரத்துல மாட்டுவான்னு கண்டனா? செவுத்துல எய்தன்து அல்லாத்தையும் சுண்ணாம்பு பூசி அழிச்சாலும், கண்ட கண்ட பேமானிங்க சும்மா சும்மா வந்து டார்ச்சர் பண்றானுங்க. "

சாரு இன்னும் கொஞ்சம் நாள் உன்மத்த நிலையிலேயே இருந்தால் நல்லது! இந்த கும்மு, கும்மியும் ஆள் சளைப்பதாகவே தெரியவில்லையே?

அன்புடன்,
ராஜா

Anonymous said...

http://charuonline.com/blog/?p=594
இதைப் படித்தால்தான் விபரம் புரிகிறது.. :)

clayhorse said...

போன வருடம் கோடை விடுமுறைக்கு என் சொந்த ஊருக்குப் (பாண்டிச்சேரியில்) போயிருந்தபோது எங்கு பார்த்தாலும் கார்ப்பரேட் சாமியார்கள் நித்தி, ரவிசங்கர், ஜக்கி என்று பேனர்கள், கூட்டங்கள் என அல்லோகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. நித்தியின் பாதங்கள் கொண்ட ஒரு போட்டோவுக்கு பாத பூஜை செய்வதற்காக எங்கள் ஊரில் பெயர் போன டாக்டர் ஒருத்தர், தினத்தந்தி சைசில் நோட்டீஸ் அடித்து ஊரெங்கும் விநியோகம் செய்திருந்தார். பெரிய கோயிலின் அருகில் சைக்கிள் ரிப்பேர் கடைக்காரரிடம் அவர் அந்த பூஜைக்குப் போவாரா என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், ' இன்னா தம்பி நீ.. நெஜ சாமியாருன்னா வெளம்பரம் பண்ணாது. நாம போயி பாக்கணும். இப்பிடி போஸ்டர் அடிச்சி கட் அவுட் வெக்கறவனுங்கல்லாம் சுத்த பிராடுங்க. என்னைக்காவது ஒரு நாள் மாட்டத்தான் போறான் பாரேன்'. பள்ளிக்கூடம் பக்கமே போகாத அவருக்கிருந்த இந்த பகுத்துப் பார்க்கும் அறிவு இந்த 'பேர் போன' டாக்டருக்கு ஏன் இல்லாமல் போனது? அவரது மூளையின் எந்தப் பகுதி வேலை செய்யாமல் போனது? இதே போல்தான், சூரியனுக்குக் கீழுள்ள அத்தனையையும் பற்றி ஆவேசமாக எழுதுவதாகச் சொல்லும் எழுத்தாளருக்கு 'நான் குழந்தை மாதிரி. எல்லாரையும் நம்பி விடுவேன்' என்று சொல்வதற்கு எப்படி முடிகிறது? இந்த அழகில் தானே வலியப்போய் ஒரு டீ.வீயில் மாட்டிகொண்டு, பிறகு தன் உதவிக்கு, தான் கொம்பு சீவி விட்டுள்ள அவரது சிஷ்ய பதிவர்களை அழைப்பது நன்றாகவா இருக்கிறது? மறுபடியும் அங்கு அழைத்தால் போவாராம், அப்புறம் மறுபடியும் உதவிக்கு ஆள் தேடுவார். ஆனால் ஒன்று, இவர் அடிக்கும் கூத்துக்கள்தான் காமெடி உலகத்துக்கு வற்றாத கொடை. The gift that keeps on giving.

மதுரை சரவணன் said...

aappadiya ....vaalththukkal.

Unknown said...

//அதுவும் ஒருவர் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வது எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? ஒருவர் கடவுளிடம் போய் ஜேப்படித் திருட்டு செய்ய முடியுமா?//

இது ரொம்ப காமெடியா இருக்கு...!சின்னப்புள்ளதனமா இருக்கு....அங்கெல்லாம் கமெண்ட் போட முடியாதா?

clayhorse said...

// இது ரொம்ப காமெடியா இருக்கு...!சின்னப்புள்ளதனமா இருக்கு....
//அங்கெல்லாம் கமெண்ட் போட முடியாதா?

ஆமா சார். இந்தக் கொயந்த மனசுதான் 'மம்மி ரிடர்ன்ஸ்', 'காறித்துப்பு' அப்டீல்லாம் கொடல் கறி, கொத்து பரோட்டான்னு விக்க சொல்து. நல்ல சரக்கு வெச்சி வியாபாரம் செய்ற கடைக்காரரை யாராச்ச்சும் திட்டினாக்கா உடனே ' பட்சதுல புட்ச்சது' அப்டீன்னு கட வாசல்ல போர்ட் போட சொல்து. தன்னோட கடைல ஒரே இளவட்டப் பசங்களாம். ஆமா,, விஜய் படத்துக்குந்தான் ஒரே இளவட்டப்பசங்க. போய் அந்தப் புள்ளங்கள எல்லாம் படிக்க வெய்யுங்க.

Post a Comment