Saturday, March 27, 2010

செவ்வாயில் முளைத்த வெள்ளி

இந்த வாரம் யு.எஸ். அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சி நடை பெற்றது.  டெமாக்ரட் கட்சியினர் ஜனாதிபதி பதவியைப் பிடித்த போதெல்லாம் பலமாக முயற்சி செய்து, ஒபாமா வந்த பின் ஓராண்டுக்கும் மேலாக ஆசியால் அரசியல் போராட்டம் நடை பெற்றது. ஒரு வழியாக 'சுகாதார சீர்திருத்த' சட்டம் செவ்வாய்க் கிழமை காலையில் ஜனாதிபதி கையெழுத்திட்டு, இந்த நாட்டின் சட்டமானது.  2008 அதிபர் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படியோ,
அல்லது பிற மேலை நாடுகளின் சுகாதார திட்டங்களைப் போலவோ அத்தனை சிறப்பான ஷரத்துக்கள் இந்தத் திட்டத்தில் இல்லாமல் போனாலும், இன்சூரன்ஸ் சீர்திருத்தப் பாதையில் இது முதல் படி, முக்கியமான படி என்றே கொள்ள வேண்டும். அதுவுமன்றி திரு.ஒபாமா அவர்களுக்கு இது மிக மகத்தான சாதனை.  கிளின்ட்டனாலேயே முடியாமல் போன விஷயம் இது.  அது என்ன இவ்வளவு செல்வ வளம் மிகுந்த நாட்டில் மருத்துவ இன்சூரன்சில் அப்படிப் பெரிய சிக்கல் என்று நினைப்பவர்களுக்காக ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன்.

அமெரிக்காவின் இன்சூரன்ஸ் கம்பெனிகள் பகாசூரன்களையும் விழுங்கி ஏப்பம் விடுபவை. மிகப் பெரும்பாலான செனேட்டர்களும் மககளவைப் பிரதிநிதிகளும் கட்சிப் பாகுபாடு இல்லாமல் இந்தக் கம்பெனிகளின் பாக்கெட்டுகளில். அவர்களுக்குத் தீனி போடுவதில் பெருநிதி நிறுவனங்களுக்கும், எரிசக்தி நிறுவனங்களுக்கும் சளைத்தவை இல்லை.  போதாதற்கு, கார்ப்பரேஷன்கள் வெளிப்படையாக எவ்வளவு வேண்டுமானாலும் தேர்தல் செலவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய உத்தரவு வேறு. கேட்க வேண்டுமா?  கடந்த ஓராண்டாகப் பணத்தைத் தண்ணீராக செலவழித்து ரிபப்ளிக்கன் கட்சியினர் மூலமும், ஏராளமான லெட்டர்பேட் அமைப்புகள் மூலமும் போராட்டங்கள் நடக்க வைத்து இந்தப் புதிய மருத்துவ சீர்திருத்தத்தை வரவிடாமல் செய்தனர்.  கற்பனைக்கு எட்டாத அளவு பொய்களுடன் பல்முனைத் தாக்குதல் நடைபெற்றது.  இந்நாட்டு மக்கள் பொதுவாகவே தம் எதிர்காலம் பற்றிய பயத்துடனும், அரசாங்கத்தின் மேல் அவநம்பிக்கையுடனும் வாழ்பவர்கள்.  இந்த சீர்திருத்தம் வந்தால் மக்களின் சுதந்திரம் பறிபோய்விடும் என்றும் (?!) ஒடுக்குமுறை அமலுக்கு வரும் என்றும், பொருளாதாரம் மேலும் நலிவுற்று மக்கள் மென்மேலும் வாழ்வாதாரத்தை இழப்பர் என்றும்  மக்களை பயமுறுத்துவதில் Fox News TV, கன்சர்வேட்டிவ் ரேடியோ ஆகியவற்றின் பிரச்சார பலத்துடன் ரிபப்ளிக்கன் கட்சி திறமையாக இருந்தது. ஒரு கட்டத்தில், இந்த சீர்திருத்தத்தை நிறைவேற்றி, ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி தருவது இயேசு கிறிஸ்துவுக்கு எதிரானது என்றே பிரச்சாரம் செய்யப்பட்டது.  நவம்பர் 2009 மாசாசுசெட்ஸ் செனேட் தேர்தல் வரை ஒபாமாவும் பட்டும் படாமல் இருந்து வந்தார்.  அந்த செனேட் சீட், அ.தி.மு.க.வுக்கு ஆண்டிப்பட்டி போன்று டெமாக்ரட் கட்சிக்கு இருந்தது.   அனால் அந்தக் கட்சிக்கு வழக்கமாக வாக்களிப்பவர்கள் ஒபாமாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள். உடனே விழித்துக்கொண்டு ஒருவழியாக நீர்த்துப்போன மசோதாவை இரு அவைகள் மூலமாக மிக சாமர்த்தியமாக நகர்த்தி நான்கு மாதங்கள் போராடி, தடைகள் பல தாண்டி சட்டம் இயற்றினார்கள்.   இதைத் தொடர்ந்து, பல இடங்களில் டெமாக்ரட் கட்சி அலுவகங்கள் மீது கல்லெறிவது, அக்கட்சிப் பிரநிதிகளைத் தொலைபேசியில் மிரட்டுவது போன்ற அராஜகங்களை நிகழ்த்தினார்கள்.

அதே கையோடு, அடுத்த நாளே கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் சீர்திருத்தத்திலும் முதல் படி எடுத்து வைக்கப்பட்டது.  இந்த நாட்டில் கல்லூரிப் படிப்பு என்பது மிக மிக செலவு வைக்கும்.  ஒரு காலத்தில் கல்லூரியின் நிதித் துறை, மற்றும் அரசாங்கத்தின் கடன் வசதி மற்றும் ஸ்காலர்ஷிப் இருந்ததனால் கல்லூரிப் பட்டதாரிகள் விகிதம் உலகிலேயே அமெரிக்காவில் அதிகமாக இருந்தது.  பின்னர் வந்தார் அயோக்கிய சிகாமணி ரொனால்ட் ரீகன்.(அது பற்றிப் பின்னர் ). அன்றிலிருந்து இன்று வரை கல்லூரி முடிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் மிகப் பெரிய அளவில் அநியாய கந்து வட்டியில் கடன் இருக்கும்.  அந்தக் கடனை அடைக்க அவனது ஆயுளில் பல வருடங்கள் ஆகும்.  அரசின் கல்விக் கடனுக்கும், கடன் வாங்கும் மாணவருக்கும் இடையே பல இடைத்தரகர்களைக் கொண்டுவந்தார்கள் சில அரசியல்வாதிகள்.  இந்தப் புதிய சட்டத்தின் மூலம் அந்த இடைத்தரகர்களைப் பெருமளவில் நீக்கி, மாணவர்களின் கடன் சுமையைக் குறைக்கப் பல ஷரத்துக்கள் உள்ளன.  நாடு மீண்டும் கல்வித் துறையில் உன்னத நிலையை நோக்கி எடுத்து வைக்கப் பட்ட முதல், முக்கியமான படி இது.  வழக்கம் போல பெரு நிதி நிறுவனங்கள், ரிபப்ளிக்கன் கட்சியினர் மற்றும் சில வலதுசாரி டெமாக்ரட்கள் ஆகியோரின் எதிர்ப்பை முறியடித்து சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டங்கள், 'டீ பார்ட்டி இயக்கம்' என்ற இயக்கத்தினை அமெரிக்கா முழுமைக்கும் அறிமுகப்படுத்தியது.  இவர்கள், பள்ளிப் படிப்பைத் தாண்டாத, நிறவெறி மிகுந்த, பிற்போக்கு எண்ணம் கொண்ட, பைபிளும் துப்பாக்கியும் தாங்கிய சிறு நகர வெள்ளையர்கள்.  எதிர் கருத்துக் கொண்டவரைப் பேச விடாமல் கூச்சலிடுவது, விஞ்ஞானத்தைக் கிண்டல் செய்வது, சொன்ன மாத்திரத்தில் ஆயிரக்கணக்கில் கூடுவது இவர்கள் குணங்கள். ஆகவே இயற்கையாக ரிபப்ளிக்கன் கட்சி சார்புடையவர்கள்.  பெரிய கார்ப்பரேஷன்கள் இவர்களைக் காண்டிராக்ட்கள் மூலம் உபயோகப் படுத்திக்கொள்ளும்.

வேடிக்கைக்கு:  இவர்களின் இந்த போஸ்டர்களைப் பாருங்கள்.




பார்க்கின்சன் வியாதியால் பாதிக்கப்பட்ட அணு விஞ்ஞானியிடம் கத்தும் இதோ இந்த முட்டாளைப் பாருங்கள்







இந்த வீடியோக்களையும் பாருங்கள்

3 comments:

Raja M said...

அருமையான பதிவு. இந்த ஊர் கூத்து ஒரு வகை. நம்ம ஊர் கூத்து ஒரு வகை. ஆனால் எல்லாம் கூத்து தான்!

Anonymous said...

You read too many liberal blogs. Socialism is not the answer to worlds problem.Remember india used to be a socialist country until 1990 and the result was were one of the poorest countries in the world.

clayhorse said...

Dear anonymous, my take is this. When my family member does not do well and gets into trouble, I do step in and help in genuine cases. I never know I could be next. Pre-1990s were too early for Nehru's socialist programs to give fruit. Given my back ground, I wouldn't be tapping my keyboard in my own home if India's socialism didn't help me. Please give an unbiased reading on what Nehru has done for India. I'm not sure if you are contented with what the uncapped greed has done to the US and rest of the world. Speaking of India's post-1990's development, have you visited far remote parts in Tamilnadu recently?

Post a Comment