Tuesday, September 6, 2011

சேதம் - நாவல் - கபாலிக்குத் தபால்


ஒலகத்துலேயே பெரிய அறிவாளியான அண்ணாத்தை கபாலிக்கு, சிஸ்யன் துலுக்காணத்தோட தபால்.
வெசயம் இன்னான்னா, நேத்து நம்ம மஜீத் பாயோட பழைய பேப்பர் கடையில ஓரமா நின்னுக்குனு பலான பலான புஸ்தகத்தலாம் நைசா பொரட்டிப் பாத்துக்கனு இருக்க சொல்ல, ஒம்பேரு போட்டு, 'சேதம்' அப்டீன்னு அதுங்களுக்கு நடுவுல ஒரு புஸ்தகம்.  பாயாண்ட போயி, 'இன்ன பாய், நம்ம குருநாதரோட பொஸ்தகத்த ஞாபகமில்லாம பலான பொஸ்தகத்துக்கு நடுவுல மறந்து போயி வெச்சிட்டியே' அப்டீன்னு சொன்னேன். அதுக்கு பாயி, 'போடா பொறம்போக்கு.  கபாலி போட்ட 'சேதம்' பொஸ்தகத்த அங்க வெக்கறதக்குக் கூடக் கூச்சமா இருக்குதுடா' ன்றாரு.  இப்பதான் எல்லாமே நெனப்புக்கு வருது.


கொஞ்ச நாளக்கி முன்னாடி நீ பெரிய பெரிய மன்சங்கள எல்லாம் கூட்டியாந்து, டீ, பொற, வட, எல்லாம் குடுத்து ஒரு பங்சன் நடத்தன இல்ல?  நாலஞ்சி பாட்டு எழுதி, இப்பக்கூட ஏதோ ஜெயில்ல இருக்குதே அந்தக்கா, அப்பால கொஞ்சம் சினிமாக்காரங்க, எல்லாரையும்  உன் தோஸ்து, ' மானா பூனா', செலவுல கூட்டியாந்து களேபரம் பண்ணி இந்தப் புஸ்தகம் பத்தி பேசனாங்க.  அப்பப் ப்ரின்ட்டு போட்ட 45 காப்பியும் அப்பவே வித்துட்டதா நீ கூட பிட் நோட்டீஸ் அடிச்சி விட்டியே... இப்பதான் எல்லாமே நெனப்பு வருது.  அதுல கூட ஒரு சினிமாக்காரன் ஏதோ பேசி, வெவகாரம் ஆச்சே, அதப்பத்திக் கடசீல சொல்றேன்.

நம்ம குருநாதரோட புஸ்தகமாச்சே, எங்கயும் கெடக்கலேயே, நாம வாங்கலாம்னு பாய்க்கிட்ட வெல கேட்டேன்.  அந்தாளு அதுக்கு ஒரு மாரி சிரிச்சிட்டு, 'டேய், நானே ஒனக்கு 50 ரூபா தரேன், எடுத்துட்டுப் போடா'ன்னாரு.  சரி, ஒரு கட்டிங்க்க்கு ஆவட்டுமின்ட்டு வங்கியானது படிச்சேன்.  கூவத்துலையே பொறந்து பன்னிங்களோட வளந்த என்னாலேயே அந்த கப்பத் தாங்க முடியல வாத்தியாரே.    ஆமா, இன்னாமோ பாடிக்கு டார்ச்சர், மனசுக்கு டார்ச்சர் அப்டீன்னு ஒரே ரீலா சுத்தி இருக்கியே, இதப் படிக்கறவனுக்கு எம்மாம் டார்ச்சர் குடுத்துக்கிரன்னு ரோசன செஞ்சி பாத்தியா?

இன்னாமோ கடல்ல முக்கி முத்து எடுகாரா மாரி ஊர்ல இருக்குற சாக்கட எல்லாத்துலயும் நீ முக்கி வேற இன்னாத்தையோ எடுத்துக் கட பரப்பிட்டியே தலிவரே....  இனிமேல நான் யாராண்டியாவது உன்னோட சிஸ்யன்னு சொல்லிக்க முடியுமா?  அது எப்டீ, ஒரு எடத்துல பெரிய வஸ்தாது மாரி பீலா உட்ற, வேற எடத்ல, பிஸ்கோத்து மாரி ஜகா வாங்கற.  வெள்ளக்காரில இருந்து, வேலக்காரி வர எல்லாரும் ஒன்னப் பாத்த மெல்ட் ஆயிட்ராங்கன்னு கன்னாபின்னான்னு சுத்தற. ஒரே வண்ட வண்டையா எழுதி, உங்க 'மானா பூனா' அதப் ப்ரின்ட்டு வேற போட்டுக் குடுத்துக்கிராறு.  ஒடனே மத்த அல்லக்கைங்க எல்லாம் 'மனசுல அழுக்கு இருந்தா அல்லாமே அசிங்கமாத் தெரியும்' அப்டீன்னு ஒனக்கு சப்போட் வந்துட்டானுங்க...   ஆமா, தெரியாம கேக்கறன்,  நாளக்கி அவுனுங்க ஊட்டுக்குள்ளார பூந்து, நாடு ஊட்ல வெளிக்கு இருந்து வச்சிட்டு, நானும் அதே டயலாக்க உட்டா இன்னா செய்வானுங்க?  ஒம்புஸ்தகத்தப் பத்தி ஏதாவது சொல்லனும்னு பாக்கறன்,  நீ பிக்பாக்கட் அடிச்சதையும், பண்ணி உரிச்சதையும், தண்ணி அடிச்சதையும் உட்டா, தைரியமா போட வேற ஒரு வெசயமும் கெடக்கல.

அந்த மீட்டிங்ல ஒரு சினிமா டைரக்டரு 'சேதம் சரோஜாதேவி போல இருக்குது'ன்னு சொன்னதுக்கு ஒரு மாசமா பால்மாறாம பிட் நோட்டீஸ் அடிச்சி வுட்டியே!  ஒனக்கு எதுக்கு அந்த வேல?  நாயமா பாத்தா, சரோஜாதேவி பொஸ்தகம் போடறவங்கதான் அந்த டைரக்டரு மேல கேசு போட்ருக்கணும்.

ஆனா ஒண்ணுப்பா.. இந்த கிரிக்கெட்டெல்லாம் வெளாயாடத் தெரிஞ்சவங்க க்ரவ்ண்டுல வெளையாடுவாங்க.  'இன்னாடா இவனுங்களுக்கு இவ்ளோ பேரு கெடக்கிது'ன்னு, ஆட்டந்தெரியாத கேசுங்க ஒண்ணு ரெண்டு திடீர்னு துணிய எல்லாம் அவுத்துட்டு ஓடுங்க.  ஜனமெல்லாம் கொஞ்ச நேரம் அதப் பாக்கும்.  இந்த லூசுங்களும், அதுங்கள ஜனங்க ரொம்பப் பிரியமாப் பாக்குறதா நெனச்சிக்கிட்டு, அப்பால வேற எடத்துலயும் அப்டீ செஞ்சி செருப்படி வாங்குவானுங்க.  இன்னா இருந்தாலும் ஒன்னோட வயசுக்கு ஒரு மருவாதி வெச்சி சொல்றன், நீயும் அப்டீ ஆயிடாத.  வேணுமின்னா, நம்ம டில்லி கிட்ட சொல்லி ஒரு தபா மந்திரிச்சிக்கினு வந்துரு.

இப்டீக்கு --சிஸயன்  துலுக்காணம்

4 comments:

Raja M said...

அடேங்கப்பா துலுக்காணம், அண்ணன் கபாலிக்கு இவ்வோளோ அன்பா ஒரு கடுதாசு போட்டுருக்கியே! பிரமாதமப்பா!

Jegadeesh Kumar said...

கபாலிக்கு அந்த ஐயப்பனாவது நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்.

clayhorse said...

கொடுமையான காலகட்டம் சாரே! இப்போ மாந்த்ரீகம் வேற மாஸ்டர் பண்ணியிருக்காராம். புது நாவல்ல டுட்டோரியல் கொடுத்திருக்காராம். எத்தனை அல்லக்கைஸ் மண்டை ஒட்டைத்தேடி மயானத்துல அலையப் போகுதுங்களோ ? அடுத்த புக் ரிலீஸ்ல மேஜிக் ஷோ நிச்சயம் உண்டு.

manoharan said...

புத்தி சொல்லி திருந்துற ஆளா நம்ம கபாலி .//கூவத்துலையே பொறந்து பன்னிங்களோட வளந்த என்னாலேயே அந்த கப்பத் தாங்க முடியல வாத்தியாரே. //செருப்படியும் திருத்தாது

Post a Comment