Thursday, August 26, 2010

கபாலிக்கு வந்த காயிதங்கள்

நம்ம கபாலி அஞ்சாங்கிளாசத் தாண்டலன்னாலும் பிட் நோட்டீஸ் அடிச்சு விடுறதுல கிங்கரன். போன வாரம் ரெண்டாம் நம்பர் கடைக்குப் பக்கத்தில் ஒரே  கலாட்டா.  ஏதோ மட்டமான கலக்கலைக் குடிச்சிட்டுத் தன்னோட சிநேகிதன் கந்தசாமியிடம் கையை வீசி வீசிப் பேசிக் கொண்டிருக்கிறான். கைலி கிழிந்திருக்கிறது.  கிட்டே போய்ப் பார்க்கலாமா?
  "தபாரு கன்சாமி, இந்த கோவாலு என்னா ரொம்பப் பெரியவனா?  அல்லா ஊர்ல இருந்தும் அவனக் கூப்ட்டு, கூப்ட்டு விருந்து வக்கறானுங்க, பேச சொல்றாங்க, ப்ரைஸ் தர்றாங்க, படிச்சப் பசங்கல்லாம் அவம்பின்னாலப் போறாங்க, .. தாங்கலடா..." 

கந்தசாமி, "கபாலி அண்ணே, கோவாலு ஒரு காலேஜ்ல வாத்யாராக்கீறாரு....  அஞ்சாங்க்ளாஸ் தாண்டாத நமக்கு எதுக்கு வவுறு எரியணும்?  பத்தாததுக்குப் பழைய  பிளேடு  எட்த்து நீயே உன்ன அங்கங்கக் கியிச்சி வச்சிருக்க.  இதெல்லாம் நல்லாவா இருக்குது..?  நீயும் அவுங்க வூட்டு முன்னாடிப் போயி சவுண்டு குடுத்துப் பாத்த.  அப்பால உன்னோட ஒரு சிஸ்யப் பையன், என்னமோ  'வாயப் பொறந்தவன், வாயப்பயம் துண்ண மாட்டேன்'னு போஸ்டர் ஒட்டுவானே, அவன கொம்பு சீவி உட்ட.. அந்தாளு கோவாலு ஒண்ணுத்தையுமே கண்டுக்கவே மாட்ரானே. "

கபாலி, "இன்னா கன்சாமி சொல்ற?  அஞ்சாங்க்ளாஸ்னாலும் நெதானமாப் பத்து வருசம் பட்ச்ச அனுபவம் இருக்குதுல்ல.. வேக வேகமாப் பாஸ் பண்ணிட்டுப் போன கோவாலுக்கு இன்னா தெரியும்.  இன்னிக்குத் தேதிக்கி, நான் அடிக்கிற பிட் நோட்ட்டீ சத்தான நெறையப் பேரு படிக்கறாங்க.  லச்சுமி அக்காவுக்கு கூட காலைல யாராவது நம்ம நோட்டீசப் படிச்சிக் காட்னாத்தான் வெளிக்கே போவுதாம்.  கோவாலு எழுதறக் கணக்குப் புஸ்தகத்தத் தொறந்தா எனக்கும் நம்ம பசங்களுக்கும் ஒரே கொட்டாவியா வருது.."

கந்தசாமி, "அதான் சொன்னேனே, அதல்லாம் காலேஜ் பசங்களுக்கு எழுதற புஸ்தகம், நம்மள மாதிரி பிட் நோட்டீஸ் கேசுக்கெல்லாம் தொறந்தா தூக்கந்தான வரும்.  சரோஜாதேவி புஸ்தகம் போட்ரவனே ரெண்டு தபா நம்ம கதையத் திருப்பி அனுப்பிட்டானுங்க. ".

கபாலி, "இன்னாடா கன்சாமி நாக்கு நீளுது.. இனிமேல நீ எங்கிட்டப் பேச வாணாம்.  நானும் பிட் நோட்டீஸ் அடிக்கிறதா இத்தோட உட்டுடறேன்.  நானு ஒரு காலத்துல எவ்ளோ பெரிய ஆளு.  நம்மப் பேட்டப் பக்கம் சினிமா சூட்டிங்குக்கு வந்த கவுண்டமணியவே என்னா தொழிலு செய்றாருன்னு கேட்டிருக்கன்.  அவுரு சினிமாவுல காமடி வேசம் போட்ரவருன்னு இப்பதான் தெரியும்.  பதினஞ்சி வருசம் முன்னால ஆந்த்ராவுல சரக்குக் காச்சி வித்துக்குனு இருந்தப்ப, மெட்ராஸ் எந்த நாட்ல இருக்குதுன்னு கூட எனக்குத் தெரியாது.  அவ்ளோ பெரிய ஆளு நானு.  நாந்தான் எல்லாரையும் திட்டுவேன்.  யாரும் என்னப் பத்தி ஒண்ணும் சொல்லக்கூடாது.   கோவாலுக்குப் படிச்சப்  பசங்க இருந்தா, எனக்கும் இருக்கானுங்க. நம்ம சிஸ்யப் பசங்க, சினேகிதப் பசங்க எல்லாம் போட்டக் கடுதாசிங்க, அதுக்கு நாம் போட்ட பதிலுங்க,,.  இன்னும் போஸ்ட் பண்ணல.  படிக்கறன் கேக்கறியா?...  " கந்தசாமிக்கு வேற வழி?  மரத்தடியில் குந்திக்கொண்டு தன் மஞ்சள் பையிலிருந்த காகிதங்களை எடுக்கிறான் கபாலி.

" காயிதம் ஒண்ணு : தலீவர் கபாலி அண்ணாத்தைக்கு ஆய்வார்ப்ப்பேட்ட முன்சாமி எய்தன்து.  உனக்கு காயிதம் எய்திட்டு அத்தத் தபால்ல போடலாமா வாணாமான்னு ஒரே ரோசன.  சரி, அண்ணாத்தைக்கு அன்ப்ச்சி வெக்கலாம்.  அவரு அத்தக் கிய்ச்சிப் போடட்டும்னு அனுப்பிட்டேன்.  எவ்ளோப் பெரீய ஆளு நீ!  என்ன மாறி சோமாறிக்கு அல்லாம் உன்னோட நேரத்த வீணாக்காத.. அந்த நேரத்துல நீ அட்ச்சி உடற பிட் நோட்டீஸ் எவ்ளோ சூப்பரா இருக்கும்.  அதெல்லாம் என்ன மாறி ஆளுங்களுக்கு லாஸ் ஆவுது...

கபாலியின் பதில்:  பரவால்ல முன்சாமி. எம்மேல இவ்ளோ ரெஸ்பேட்  (respect) வெச்சிக்கிறியே ரொம்ப சந்தோசம்.  நேரத்தைப் பத்தி ஒண்ணும் பீலிங் பண்ணிக்காத. முந்தி ஒரு தடவ ஒரு கய்த, பெங்களூர்ல இருந்து தெனம் லெட்டர் போடும்.  அந்த லெட்டர்ல அவ்ளோ மிஸ்டேக் இருக்கும்.  அத்த சரி பண்ணி பிட் நோட்டீஸ்ல போடறதுக்கே டவ்சர் பிஞ்சிடும்.  ஒரு தபா அத்தோட லெட்டரப் பத்து நாளா நான் பாக்கலன்னுதும், அது போயி, நம்ம விரோதி கீறானே, அந்த கோயம்பேடு குமாரு, அவுனுக்கு அனுப்பினுக்கீது.  அத்த வுடு. எங்கியோ ஆரம்பிச்சு எங்கியோ வந்துட்டன்.

காயிதம் ரெண்டு:
சகா கபாலிக்கு, வண்ணாரப்பேட்ட ஆஸ்டல் வாட்ச்மேன் வடிவேலு எழுதறது...  அண்ணாத்த,, இன்னா கொஞ்ச நாளா நம்பப்  பேட்டப் பக்கம் வந்து பிட் நோட்டீஸ் ஒண்ணுத்தையும் தரல?  ஒன்னோட பிட் நோட்டீசத்தான் நான் 'அல்லாத்துக்கும்' யூஸ் பண்றது.  ஒடனே புதுசா பிட் நோட்டீஸ் அட்ச்சி உடலன்னா, ஒன்ன எங்க காம்பவ்ண்டு லாக்கப்ல தள்ளுவேன் (சும்மா, லவ்சுதான் !!) .
கபாலி: பாத்தியா கன்சாமி, எப்பேர்க்கொத்த ஆபீசரு இந்த ஆஸ்டல் வாட்ச்மேனு!  அண்ணாத்தையோடப் பவரப் பாத்துக்கினியா?

காயிதம் மூணு:
வாத்தியாரு கபாலிக்கு ... சைதாப்பேட்ட ஜெயபாலு எழுதனது.. போன மாசம் மந்தவெளி மதுரவீரன் கோயில் திருவிழாக்கு நீ வந்தப்ப ஒன்ன தூரத்துல இருந்து பாத்துக்கினே இருந்தேன்.  கிட்ட வந்து பேச பயமா இருந்துது.  அப்பால அன்னிக்கு சாய்ங்காலம் டாஸ்மாக்ல தண்ணி அட்ச்ச ஸ்டைலப் பாத்து அப்பீட் ஆயிப்புட்டேன்.  சரக்கு அடிச்சி முடிச்சு வெளியப் போனப்ப ஒன்னோட பூப்போட்ட சொக்காயில என்னோடக் கை ஒரசுச்சு.  அப்டியே ஷாக் ஆயிட்டேன்.  அன்னியில இருந்து அந்தக் கைய நான் கழுவறதே இல்ல.  நீதான் எங்குளுக்குத் தலைவன்.
கபாலி:  ஜெயபாலு, ஒன்ன மாறி இருக்கற பசங்களுக்குத்தான நானு ராவு பகலா கண்ணு முயிச்சி பிட் நோட்டீஸ் அடிக்கிறன்.  நீ நல்லா இரு.  சைதாப்பேட்ட மீன் மார்க்கட்ல நல்ல திருக்க மீனு கெடைக்குமில்ல?  ஒடனே எனக்கு அத்த வாங்கி அனுப்ப வாணாம்.

காயிதம் நாலு:
ஆருயிர் அண்ணன், தங்கத் தலைவன் கபாலிக்கு டில்லி எழுதற லெட்டர்.  நான் மூணாங்கிளாஸ் எட்டு வருசம் படிச்சேன். தலைவா, நாங்கூட உன்ன மாதிரிதா(ன்).  எத்தையும் படிக்க மாட்டேன். ஆனா ஒன்னப் பாத்த ஒடனேயே நீதான் பெரிய அறிவாளின்னு தெரிஞ்சிகிட்டேன்.

காயிதம் அஞ்சி:
கபாலி, கோவாலு, கோயிந்தன் - கம்பேர் பண்ணு தலீவா. 
கோயிந்தன் - சாவித்திரி,  கோவாலு - மெட்டி ஒலி மாமியா, கபாலி - ஷக்கீலா.
......................

கபாலி:  டேய் கன்சாமி, எங்கடா ஓடற, நில்றா,,.. சரக்கு வாங்கிக் குட்த்துட்டுப் போடா...

4 comments:

Jegadeesh Kumar said...

எப்டிங்க இப்டி? பொறுமையாய் முழுசும் படிக்கும்போதுதான் அண்ணாத்த கபாலி யாருங்கறது தெரியுது. தலைப்பை மட்டும் சரியா வச்சிருந்தீங்கன்னா இன்னேரம் இந்தப் பதிவு படு பாப்புலராகியிருக்கும்.
இன்னொன்னு, நீங்க என்ன தேங்கா சீனிவாசன் ரசிகரா?

clayhorse said...

தேவபாஷையாகிய மெட்ராஸ் தமிழை தேங்காய் போல யாரும் பேசியதில்லை. அந்த வகையில் அவருக்கு நான் ரசிகன்.

sammuvam said...

அண்ணாத்ய்யே

கபாலி அர லூஸ்லயிருந்து முழு லூஸா பூட்டர்ரு. கீழ்ப்பாக்காத்தலயிருந்து குத்தாலம் வரைக்கும் போயாச்சி. ஒன்யும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாய்ங்கோ. அவரு உட்ற பீ நோடீஸை, ஸாரி . . . பிட் நோடீஸ்ஸை பட்ச்சி, சிர்ச்சி, தொட்ச்சி போட்டுகுனு போய்க்கினே இர்க்க வேண்டியத்தான்.

-சப்பை சம்முவம்

clayhorse said...

நானு முப்பத்தஞ்சி வர்சமா சரக்குக் காச்சி விக்கறேன். என்னான்ட வந்து ஒரு பிஸ்கோத்துப் பொண்ணு "இன்னா அண்ணாத்த... டீ, காபியெல்லாம் சேத்து விக்கலியா" ன்னு கேக்குது. இந்தா மாறி நாட்டுக் கயண்டுப்போனக் கேசுங்களோட சரக்கு விக்கிறது கஸ்டமா இருக்குதுப்பா. நம்மான்ட சரக்கு வாங்கலன்னாலும் பரவால்ல ஆளா உட்டாப் போதும்.
-- இப்பிடிக்கு கபாலி

Post a Comment