Wednesday, April 21, 2010

பார்வதியம்மாவிடம் இருந்து பாரதத்தைக் காத்த பரமாத்மாக்கள்


போன வாரம் சென்னை விமான நிலையத்தில் தேசப் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விஷயம் நடந்தது.  75 இராணுவத்தினரைக் கொன்ற நக்சல்கள் அங்கும் வந்து விட்டனரா?  இல்லை, அவர்கள் சுண்டைக்காய்கள். அதை விட மிக மிக ஆபத்தான பெண்மணி ஒருவர் இந்தியாவுக்குள் புக இருந்தார்.  வந்தவர் வெகு புத்திசாலித்தனமாக, ஒரு 78 வயதான, பல்வேறு நோய்களுடன் போராடும் பெண்மணி போல் வேஷம் போட்டு சக்கர நாற்காலியில்
வந்து விமான நிலைய கஸ்டம்ஸ் அருகேயே வந்து விட்டார்.  கடமை தவறாத கஸ்டம்ஸ் அதிகாரிகள் உடனே பாய்ந்து சென்று பார்வதி அம்மாளை வந்த விமானத்திலேயே ஏற்றித் திரும்ப அனுப்பினார்கள்.  ஒரு வழியாக பாரதம் பிழைத்தது.  மறுநாள் காலையில்  ஒண்ணுக்கு இருக்கும்போது பேப்பர் படித்துத் தெரிந்து கொண்டார் தமிழக முதல்வர்.  இந்தத் தள்ளாத ( நமீதா, ரம்பா, உள்பட எதையும் தள்ளாத ) வயதிலும்,   நாட்டு நலனே உயிர் மூச்சா(வா)கத் தமிழ்நாட்டை வழிநடத்தும் திரு மு.க. முதல்வராக இருப்பது தமிழகம் செய்த தவப்பயன்.  வாசலோடு திருப்பி அனுப்பப்பட்ட அந்தப் பெண்மணி யாரோ பிரபாகரன் என்பவரது அன்னையாம்.  தமிழ்நாட்டில் மிகப் பெருமளவில் புரட்சிகள், கலவரங்கள் உண்டு பண்ண ஏராளமான புத்தகங்கள் கொண்டு வந்தாராம்.  நல்லவேளை,  தமிழர்கள் டாஸ்மாக் பக்கம் போகாமல் அந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டுப் புரட்சி செய்திருப்பார்கள் !! 

மாதாமாதம் பாகிஸ்தானிலிருந்து யாராவது இந்தியா வந்து வைத்தியம் பார்ப்பது அல்லது குண்டு வைப்பது போன்ற அரசு முறைப் பயணமாக வந்துபோகிறார்கள்.  அதுபோல ஏதாவது ஷரத்து, ஒப்பந்தம் இலங்கைத் தமிழர்களுடன் இருக்கிறதா என்ன?  அல்லது அவர்கள் கொஞ்சம் கலராகவாவது இருக்கிறார்களா?  'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்', 'எங்கிருந்து வந்தாரை', என்ற sub -clause -ஐ ரகசியமாக வைத்திருக்கிறது.  அதனால்தான் 'இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் அல்ல' என்று சு.சாமி சொல்லியிருக்கிறார்.  இவர் ஏற்கனவே மதுரை முருகன் இட்லிக்கடை விவகாரத்தை ஐ.நா.சபை வரை கொண்டு போய் பாலஸ்தீனியர்கள் மற்றும் அபிசீனியர்களின் சதியை முறியடித்தவர்.   இவரைப் போலவே பதிவகத்தின் 'சோ' என்று போற்றப்படும் 'dont -do ' எனப்படும் வெள்ளை உள்ளம்  படைத்த நல்லவர், இந்தம்மா இங்குக் காலடி வைத்தால் தமிழகத்தில் என்னவெல்லாம் அழிவுகள் நிகழும் என்று விலாவாரியாகப் புட்டு வைத்திருக்கிறார்.  இது புரியாத இணையத்துக் கலவரப் பார்ட்டிகளான பட்டாப்பட்டிவானம்பாடி, போன்றதுகள், அந்த நல்லவரை, குழந்தை உள்ளம் படைத்தவரைக் கிழித்து நார் நாராக இணையம் எங்கும் தொங்க விட்டிருக்கிறார்கள்.  ச்சே.. நல்லவர்களுக்கே காலம் இல்லங்க.  இது இப்படி இருக்கையில் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருந்த வைகோ, திருமா போன்றோர் திடீரென்று வந்து, கொடுத்த காசுக்குக் கூவி விட்டுப் போய் விட்டார்கள். லோக்கல் அன்னை ஹைபர்னேஷனில் (hibernation)  இருப்பதால் அவர் கருத்து ஏதும் தெரியவில்லை.  ஒருவேளை ஆட்சியில் இருந்திருந்தால் கைது பண்ணியிருப்பார்கள்.  மருத்துவர் ஐயாவுக்குப் பல்வலி அதிகமாக இருப்பதால் ஒன்றும் பேசவில்லை.  ஏதோ சைகை காட்டினார், ஆனால் அது கெட்ட வார்த்தையில் திட்டுவது போலிருந்ததால் இங்கு எழுத முடியவில்லை. 

கடைசியாகக் கிடைத்த தகவல்:
அந்தப் பார்வதியம்மாவின் மகன் பிரபாகரன் ஏதோ ஈழத் தமிழினத் தலைவராக இருந்தவராம். விஷயம் இப்படி வேறு விதமாகப் போகவே,  உலகத் தமிழினத் தலைவர், பிறவிக் கலைஞர் மு.க சொன்னார்:  1931 -ல் போடப்பட்ட காந்தி-இரவின் ஒப்பந்தப்படி இந்தம்மாவின் பெயர் அந்தக் கண்காணிப்புப் பட்டியலில் இருந்ததாம்.  அதனால் அதிகாரிகள் பாய்ந்து மடக்கி விட்டார்களாம்.  அது பற்றி முதல்வர் தாம் உடன்பிறப்புகளுக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதப் போவதாகக் கூறியுள்ளார்.  கடிதம் எழுதக் காகிதம் கிடைத்து, பேனாவில் இங்க்கும் இருந்தால் உடனே  எழுதி விடுவார்.  இனிமேல் 1931 -க்குப்  பின்னர் போடப்பட்ட ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்று அன்னை சொன்னதாகச் சொன்னார்.  மெயின் லேண்டு தமிழர்கள் ஐ.பி.எல் மேட்சுக்கு இடையில் பக்கோடா தின்ன வெளியே வந்தால் கருத்துக் கேட்கலாம் என்று இருக்கிறேன்.

9 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
மாதாமாதம் பாகிஸ்தானிலிருந்து யாராவது இந்தியா வந்து வைத்தியம் பார்ப்பது அல்லது குண்டு வைப்பது போன்ற அரசு முறைப் பயணமாக வந்துபோகிறார்கள்
//

கலக்கல் வரிகள்...
இவர்களுக்கு, பேசாமா, Long Term Visa , கொடுத்துவிடலாம் சார்..

அப்படியே.. நாம, இத்தாலி போயி .. இட்லிகடை வெச்சு பிழைச்சுக்களாம்..

ப.கந்தசாமி said...

ஜோரா எழுதியிருந்தாலும் விஷயம் அவமானத்துக்கு உரியது.

clayhorse said...

என்னங்க சார் பண்றது.. நம்மால ஒண்ணும் செய்ய முடியாத ஆதங்கம். ஒவ்வொரு தடவையும் நெனச்சிப் பாக்க முடியாத வகையில அறமில்லாத செய்கையெல்லாம் செய்யறாங்க. மானாட மயிலாட இருப்பவருக்குத் தன் சதையாடலையே!

Raja M said...

வயதான முதியவரை அலைய விடும் அவலம்!
உங்கள் மனக் குமுறல் புரிகிறது.

அன்புடன்,
ராஜா

clayhorse said...

பட்டாப்பட்டி,நல்ல யோசனை. இத்தாலியும் ஏறக்குறைய இந்தியா மாதிரிதான். சாலை போக்குவரத்து விதிகளை யாரும் மதிப்பதில்லை, நிறைய ஸ்கூட்டர்கள், அங்கங்கே கொத்துக் கொத்தாக விடலைகள் உட்கார்ந்து கொண்டு வருவோர் போவோரை கலாட்டா செய்வது, சொந்த ஊரில் இருப்பது போலவே இருக்கும்.

சாமக்கோடங்கி said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....

சாமக்கோடங்கி said...

மொத்தத்தில் மனிதம் எவனிடத்திலும் இல்லை..

சாமக்கோடங்கி said...

மேல இருக்குற கைப்புள்ள படங்கள்... சூப்பர்.. தனியாக இதுக்கு உங்களுக்கு பாராட்டுகள்..

சாமக்கோடங்கி said...

உள்ள நொழஞ்சவுடனே வடிவேலு வாயில அருவாளோட.. சிரிப்பா அடக்க முடியல...

Post a Comment