Tuesday, March 20, 2012

கொடுத்த காசுக்கு மேல் கூவும் தினமலர்


Dr.உதயகுமார் ஒருங்கிணைப்பில் கூடங்குளம் போராட்டம் தொடங்கிய நாள் முதலாக தினமலர் நாளிதழைப் பார்த்தவர்கள் ஒன்று கவனித்திருக்கலாம்.   எவ்வளவு வீச்சுடன் பொய்ப் பிரச்சாரம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தனது முதல் பக்கத்தில் பொய் பிரச்சாரம் செய்து வந்தது.  அதற்குக் கருத்து சொல்ல அத்தனை அரை வேக்காடுகள்.  ஏறக்குறைய அரசாங்கத்தின் ஊது குழலை விட மோசமாகவே 'செய்தி'களை வெளியிட்டு வருகிறது.  போராடும் எளிய மக்களை 'கும்பல்' என்றும், 'கூலிகள்' என்றும்,  'எப்போது கைது' என்றும் நாள் தவறாது சிறப்பு செய்திகள்.  தம் எதிர்காலத்துக்காகவும் சந்ததியினருக்காகவும் போராடும் மக்களைத் தீவிரவாதிகளை விடக் கேவலமாகச் சித்தரிப்பதை நடுநிலை மக்கள் எப்படி ஜீரணிக்க முடியும்.  செய்திகளை வெளியிடாமல் கருத்துகளையே செய்திகளாக வெளியிடும் தினமலருக்கும் நக்கீரனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது ?  ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தினகரன் நாளிதழ் ஒரு ரூபாய்க்குக் கொடுத்தபோதும், ஜெயேந்திரர் கைதின்போதும் தினமலர் வாசித்தவர்களுக்கு அதன் சாயம் தெரியும்.



கூடங்குளம் நிஜமாகவே மின் உற்பத்தியை செய்தால் கேரளத்துக்குக் கொடுத்த மிச்சம்தானே தமிழகத்துக்குக் கிடைக்கும்?  1990 -க்குப் பிறகு தமிழகத்தை ஆண்டவர்களின் யோக்கியதையைப் பார்த்தவரையில், எனக்குக் தெரிந்து,  கேரளத்துக்கு மின்சாரமும், தமிழர்களுக்கு அநேகமாகக் கதிர்வீச்சு பாதிப்பு மட்டுமே கிடைக்கும்.  தமிழக மக்களுக்காக, MGR -க்குப் பிறகு எந்த முதல்வரும் எதையும் செய்ததாக எனக்குத் தெரிந்தவரையில் இல்லை.  என்ன செய்வது, மக்களாட்சியில் மக்கள் எவ்வழி, மன்னன் அவ்வழி.  கூர்ந்து ஆராய்ந்தால்,  இந்தத் திட்டமே ரஷியக் கம்பெனிகளுக்கு உதவி செய்வதற்கும், காங்கிரசின் ஈகோவைத் திருப்திப் படுத்தவும்தான் என்பது படுகிறது.  இந்தத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் 'அணு விஞ்ஞானிகள்' என்றும், எதிர்ப்பவர்கள் 'துரோகிகள்' என்றும் தினமலர் போன்ற 'கூலிப் பத்திரிகை தினசரி கூவி வருகிறது.  புயலால் பாதிப்படைந்த ஊர்களுக்கு எந்த வித மீட்புப் பணிகளையும் செய்ய யோக்கியதை இல்லாத அரசாங்கம், செர்நோபில், புகுஷிமா போன்ற பேரழிவு கூடங்குளத்தில் நிகழ்ந்தால் என்ன செய்யும்?  பேரிடர்க் காலங்களில், மக்கள் நலனுக்கு உழைக்கும், சிந்திக்கும், அறிவுள்ள, திறமையான, தன்முனைப்பான,  அரசு அதிகாரிகளை யாராவது பார்த்திருக்கிறீர்களா?  தமிழர்கள் நன்றாக அல்வா சாப்பிடுகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.

உண்மையில் இந்த ஆட்டத்தில் புரட்சி செய்தது, வாரம் தவறாமல் ஏதாவது புரட்சி செய்து வரும் நம் புரட்சித் தலைவிதான்.  மிக மோசமான நிர்வாகத் திறமையால் தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்தவருக்குச் சிறந்த நிர்வாகி என்று 'சோ' & 'கோ' பட்டயம் வழங்கி இருக்கிறது.  மின்வெட்டைப் போக்க வேறெதுவும் முயற்சி  செய்யாமல் அதையே காரணம் காட்டி, தேர்தல் முடிந்தவுடன் உலையைத் திறக்கும் முடிவெடுத்த முதல்வர்தான் மீண்டும் இந்த வாரப் புரட்சித் தலைவி. 'தகுதி இல்லாதவர்களுக்குப் பெரிய பதவி கிடைத்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை இப்போது பார்த்தோம்' என்று திருவாய் மலர்ந்தருளிய, போலிசை மட்டும் வைத்து நாட்டை ஆளும் முதல்வருக்குக் கீழ்கண்ட பாடல்களைக் காணிக்கையாக்குகின்றேன்.

தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காண ப்படும்.

செவி கைப்ப சொற் பொறுக்கும் வேந்தர்தம்
கவிகைக்கீழ் தாங்கும் உலகு.
 

8 comments:

Anonymous said...

சரியாச் சொன்னீங்க. 1988 'லேயே பிரபாகரனுக்குக் கருமாதி செஞ்ச பேப்பர்தான் தினமலர். அப்புறம், 1985 -ல போபால்ல நடந்த விஷ வாயுக் கசிவுக்கு இன்னும் நிவாரணம் தரத் துப்பில்லாத கவர்மென்ட்தானே இது.

HOTLINKSIN.com திரட்டி said...

தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் தினமலம் நாளிதழை இன்னும் பல தமிழர்கள் தினமும் வாசித்து வருவதன் காரணம் என்னவோ...?

பலசரக்கு said...

மக்கள் இனிமேலாவது தினமலரை புரிந்து கொண்டு அறவே ஒதுக்க வேண்டும். செய்வார்களா?!!

Anonymous said...

because of posting vulgar post about Chief minister i am forwarding this blog address to AIADMK office for further action. wait for the action

Anonymous said...

தினமலரும் அதைச்சார்ந்த அறிவு ஜீவிகளும் சொல்லும் உதாரணம், "சாலையில் சென்றால் விபத்து நடக்கிறது. அதற்காகப் பயணம் செல்லாமல் இருக்க முடியுமா?" நானும் அதைத்தான் சொல்கிறேன். அமெரிக்காவில் 250 மில்லியனுக்கு மேல் கார்கள் இருக்கின்றன. ஓர் ஆண்டில் அங்கு எத்தனைப் பேர் சாலை விபத்தில் சாகிறார்கள்? தங்கத்தமிழ்நாட்டில் எத்தனை பேர் சாகிறார்கள்? அடிப்படை விஷயத்தையே ஒழுங்காகக் காலத் தெரியாத திறமையற்ற நிர்வாகமல்லாவா முப்பதாண்டுகளாக நடக்கிறது? கடும் கோடையோ, மழையோ, எந்த முன்னேற்பாடும் செய்யத் தெரியாது. நமக்கேன் இந்த வீம்பு? மேலும், ரஷ்யத் தயாரிப்களின் யோக்யதை உலகப் பிரசித்தம். உங்களுடைய நண்பர்கள் யாரேனும் விமானப் படையில் இருந்தால் மிக் (MIG) ரக விமானங்களைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள்.

clayhorse said...

>>because of posting vulgar post ...

Mr Anonymous, I respect your sentiment. I understand that it is not up to my standard either. I'll remove the link to that youtube video.
On another note, It is laughable to hear that your party people think they can send their 'allakkais' to any part of the world.

Anonymous said...

ஹலோ அனானி,
வீடியோவை சுட்டிக்காட்டிய இந்தப்பதிவர் செய்தது ஆபாசம் என்றால், அதிலே நடித்தவர் செய்தது எதில் சேர்த்தி?
நிற்க. இந்த விவாதம், அவதூறு பிரச்சாரம் செய்யும் தினமலர், தமிழின துரோகி கருணாநிதி, தமிழின விரோதி ஜெயலலிதா ஆகியோர் பற்றி.
பிரம்மபுத்திரா நதியின் ஒரு முனையில் அணை கட்டி, உங்கள் நாட்டுப் பக்கம் அதை அப்படியே வற்ற விட்டான் சீனாக்காரன். கேட்டால், அந்த அணையால் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்கிறார் உங்கள் பிரதமர் மண்ணு மோகன் சிங். இங்கு மட்டும் போலீசை விட்டுத் தாக்குகிறார்கள். தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்கள் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இதைப் பற்றியெல்லாம் தினமலர் எழுதுகின்றதா என்பதே கேள்வி.

kingofnature said...

100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் அனைத்து புத்தகங்களும் நூல் உலகத்தில்.. தற்போது 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும், 500 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் டெலிவரி முற்றிலும் இலவசம்...click me...

Post a Comment