Saturday, November 13, 2010

சென்ற வார இடைத்தேர்தல் - குடலாப்பரேஷன்



சென்ற வாரம் இடைத்தேர்தலில் வாக்களிக்க நாங்கள் வரிசையில் நின்றபோதே முடிவு ஓரளவு தெரிந்து விட்டது.  அந்த வரிசையில் நாங்கள் இருவர் மட்டுமே பழுப்பு நிறத்தவர்.  பல வாக்குச்சாவடிகளில், அதிகாலையில் இருந்தே வயதான வெள்ளையர்கள் குவியத் தொடங்கி விட்டனர்.  ரிப்பப்ளிக்கன் கட்சியினரின் 'பயங்காட்டும்' பலமுனைப் பிரச்சாரம் நன்றாக வேலை செய்திருந்தது.  மாலையில் பிரதிநிதிகள் அவையில் பெரும்பாலான இடங்களை டெமாக்ரட் கட்சியினர் இழந்த செய்திகள் வரத்தொடங்கி விட்டன.  அவையின் உறுப்பினர்களுக்கும், விட்டுப்போன மற்றும் காலியான செனேட் இடங்களுக்கும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவில் தேர்தல் வருவதால் இங்கு தேர்தல் நிதி திரட்டுவதும்,  பிரச்சாரம் செய்வதும் பல வடிவங்களில் வருடம் முழுதும் நடந்து கொண்டே இருக்கும்.  இதனால் ஊடகக் கூத்தாடிகளுக்கும், காத்தாடிகளுக்கும், கருத்துரைஞர்களுக்கும் எப்போதும் திருவிழாதான்.  போதாக்குறைக்கு அனைத்து ஊடகங்களிலும் நாளொன்றுக்கு இரண்டு மூன்று கருத்துக் கணிப்புகள் (திணிப்புகள்!).

Monday, November 1, 2010

நோய் நாடி நோய் முதல் நாடி

சமீபத்தில் பதிவர் விருட்சம் தனியார் பள்ளி நிர்வாகத்துடன் தாம் நடத்தும் போராட்டம் பற்றி எழுதியுள்ளார்.  அவர் கோரிக்கை நியாயமானதே.  அதற்கு பின்னூட்டமிட எழுதியபோது பதில் நீண்டு விட்டதால் அதனை அப்படியே தனிப் பதிவாக எழுதுகிறேன்.  தனியார் பள்ளிகளின் போக்கு அப்படியொன்றும் ஆச்சரியம் அளிப்பதாக இல்லை.  நினைவு தெரிந்த நாளாக அப்படித்தான் இருக்கிறார்கள்.  கல்வி வர்த்தகமாகிப் போனதால் பள்ளிகளும் demand - supply முறையில் இயங்குகின்றன.  Demand இருப்பதால் தரமான பொருளைத் தரவேண்டும் என்ற எண்ணம் இந்த வணிகர்களுக்கு வருவதில்லை.  கும்பகோணம் நிகழ்ச்சிக்குப் பிறகு எத்தனைப் பள்ளிகளில் கல்வித்துறை ஆய்வுகள் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?