எத்தனை
வேலை இருந்தாலும் தினமும் எதிரெதிர் செய்தித் தாள்களை மொழிக்கு இரண்டு
வீதம் வேகமாகப் படித்து விடுவது வழக்கம். இதனால் ஏதும் பயனுண்டா என்று
கேட்டால் , நிச்சயம் இல்லை. யோசித்துப் பார்த்தால் நியூஸ் பேப்பர்
படிக்கும் இந்தப் பழக்கம் நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும் போது
ஆரம்பித்தது. சென்னை சைதாப்பேட்டையில் என் பாட்டி வீட்டில் தங்கிப்
படித்துக் கொண்டிருந்தேன். அங்கிருக்கும் திரௌபதி அம்மன் கோயில்தான்
எங்களுக்கு விளையாடுமிடம்.
மாலையில்
யாரும் வரமாட்டார்கள். அதன் பக்கத்திலேயே என் பெரியப்பாக்களில் ஒருவர் ஒரு
சிறிய லென்டிங் லைப்ரரி நடத்தி வந்தார். சிகரெட் புகைப்பதற்கோ எதற்கோ
போவதற்காக என்னை தினமும் சிறிது நேரம் அந்த லைப்ரரியில் காவலுக்கு உட்கார
வைத்து விட்டுப் போவார். அப்போது அங்கிருக்கும் நியூஸ் பேப்பர் மற்றும்
காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பேன்.
Saturday, March 30, 2019
Saturday, December 31, 2016
தமன்னாவும் தமிழ்நாடும்
Tuesday, October 25, 2016
எந்த நாளும் திருவிழா - பாகம் 3 (அல்லது ) 2016 - Are You Not Entertained ?
நவம்பர் 8 எப்போது வரும், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கண்டு வரும்
இந்தக் கொடுங்கனவு எப்போது முடியும் என்று தேசமே காத்திருக்கிறது.
எப்படிப் பார்த்தாலும் அமெரிக்க வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் தேர்தல்
இது. முதன்முறையாக ஒரு பெண் வேட்பாளர் அதிபர் பதவிக்குப் போட்டியிடும்
தேர்தல் இது. பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளிலேயே பெண்கள்
பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். மிகவும் முன்னேறிய நாட்டில்
இப்போதுதான் சாத்தியமாகியுள்ளது. சக்தி வாய்ந்த செனேட்டின்
உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு மட்டுமே பெண்கள். அரசியல் அதிகாரம் என்பது
இங்கு வெள்ளை ஆண்களின் ஏக போக உரிமையாகவே இருந்து வருகிறது. பரவலாகி வரும்
கல்வி, பிறநாட்டிலிருந்து வந்த குடியேறிகள், தொழில் நுட்பம்,
பொருளாதாரம், ஆகிய காரணிகளால் அந்தக் கண்ணாடித் தளம் விரிசல் விட
ஆரம்பித்துள்ளது.
Tuesday, June 28, 2016
எந்த நாளும் திருவிழா - பாகம் 2
சென்ற பகுதியில் முதல்நிலை வேட்பாளர் தேர்தல் முறையைப் பார்த்தோம். எளிமையாகத் தெரிந்தாலும் அது உள்ளபடியே மிகவும் குழப்பமான, அர்த்தமில்லாத
முறை. 1968 வாக்கில்தான் அந்த முறை வந்தது. வருடம் முழுதும் நடக்கும்
தேர்தலினால் டி.விக்களுக்கு எக்கச்சக்கமான விளம்பர வருமானம். ஒரு பரபரப்பை
ஏற்படுத்தி, அந்த சூடு தணியாமல் பார்த்துக்கொண்டால்தான் டி.விக்களுக்கு நல்ல வருமானம்.
இது போக, ரேடியோ, இன்டர்நெட் விளம்பரம்,சம்பளத்துக்கு வேலை செய்யும்
ஆலோசகர்கள், பயணச் செலவு, கூட்டத்திற்கான செலவு என்று பெரிய பட்ஜெட்
வேண்டும். ஒரு ஜனாதிபதி வேட்பாளர் சுமாராக 1 பில்லியன் டாலர் செலவழிக்க
வேண்டும். அதற்கு நிதி திரட்ட வேண்டும்.Tuesday, June 21, 2016
எந்த நாளும் திருவிழா - பாகம் 1
போன வாரம் பாண்டியில் உறவினர்களோடு பேசியபோது, "என்னப்பா இது அநியாயமா இருக்கு.
நாராயணசாமி எலெக்ஷன்ல நிக்காம சி.எம். ஆயிட்டாரு. எங்கெல்லாம் எப்பதான்
அமேரிக்கா மாதிரி வரப்போவுதோ தெரியல". என்றனர். "சரி, இங்க எப்படி எலக்ஷன்
நடக்குது தெரியுமா?" என்றேன். "அவ்வளவா தெரியாது" என்று பதில் வந்தது.
அவர்களுக்காகவும், மற்ற நண்பர்களுக்காகவும் உலகின் இரண்டாவது பெரிய
மக்களாட்சியின் தேர்தல் கூத்துகளை இங்கு
பதிவேற்றம் செய்கிறேன்
Friday, May 20, 2016
மகேசன் தீர்ப்பு எனும் மாம்பழம்
ஐந்தாண்டுகளாக
பக்கவாதம் வந்து படுத்துக்கொண்டிருந்த அரசாங்கத்தையே மறுபடியும் மக்கள்
எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்பது, டாக்டரேட் செய்யக்கூடிய ஒரு சப்ஜெக்ட். வசூலைத் தவிர வேறு எந்த வகையிலும் செயல்பாடு இல்லை. சின்னச்சின்ன நியாயமான
போராட்டங்களைக் கூட போலிசை வைத்து அடக்குவது, பத்திரிக்கைகளுக்கு அவதூறு
வழக்குகள் மூலம் வாய்ப் பூட்டு போடுவது, எந்த அமைப்பையும் நம்பாமல், ஒய்வு
பெற்ற சில குறிப்பிட்ட அதிகாரிகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சி செய்வது,
என்று ஜனநாயக அமைப்பே கேலிக்கூத்தாக மாறியது.
Monday, March 28, 2016
மெட்ராஸ் ஷேத்ரே
Disclaimer: எழுத்தாளர் ஜெயமோகனின் நெல்லை ஜங்க்ஷன் கீதையை சென்னை எக்மோருக்கு மாற்றியுள்ளேன்...
"ஹல்லோ, துலுக்கானமா? கிண்டி கெஜாவ எக்மோர் டேசன்
கேட்டாண்ட ஸ்கெட்ச் போட்டுத் தூக்கறன்னு அட்வான்ஸ் வாங்கிக்னு 'கொக்கி
அர்ச்சுனனும்' 'கோனாரு கோவாலும்' போனானுங்க. இன்னாடா பண்றானுங்க
இவ்வ்வ்ளோ நேரம்?" என்று பேட்டை பழைய வஸ்தாது, 'நொள்ளக்கண்ணு கபாலி', தன்
மச்சானிடம் செல்போனில் கேட்டான்.
பழக்கப்பட்ட பெட்டிக்கடை
பின்னால் மறைந்து நின்று கொண்டு செல்போனில் மெல்லிய குரலில் துலுக்காணம்:
"தோ, மாமு, நாகர்கோயிலு எஸ்ப்ரஸ்ல இருந்து கெஜாவும், மாமங்காரன்
கன்ஸாமியும், கூட கொஞ்சம்பேரும் செட்டா வர்றானுங்கபா. கோனாரு இப்ப
கொக்கியக் கூட்டிக்னு டேசன் நடு சென்டர்ல நிறுத்தராம்பா. அப்ப கோவாலு
சொன்னத நான் உன்னாண்ட சொல்றேன்.Sunday, October 12, 2014
சுவரொட்டித் தமிழன், தினமணி, மற்றும் சில..
இன்ன இடத்தில்தான் ஒட்டுவது என்றில்லாமல், பசு மாட்டின் மீது ஓட்டுவது,
பெயர்ப்பலகையில் ஒட்டுவது என்பதெல்லாம் பரிணாம வளர்ச்சி, அல்லது அப்போது
அருந்திய டாஸ்மாக் சரக்கின் வீரியம் என்பதன் வெளிப்பாடே.
Tuesday, March 20, 2012
கொடுத்த காசுக்கு மேல் கூவும் தினமலர்
Dr.உதயகுமார் ஒருங்கிணைப்பில் கூடங்குளம் போராட்டம் தொடங்கிய நாள் முதலாக தினமலர் நாளிதழைப் பார்த்தவர்கள் ஒன்று கவனித்திருக்கலாம். எவ்வளவு வீச்சுடன் பொய்ப் பிரச்சாரம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தனது முதல் பக்கத்தில் பொய் பிரச்சாரம் செய்து வந்தது. அதற்குக் கருத்து சொல்ல அத்தனை அரை வேக்காடுகள். ஏறக்குறைய அரசாங்கத்தின் ஊது குழலை விட மோசமாகவே 'செய்தி'களை வெளியிட்டு வருகிறது. போராடும் எளிய மக்களை 'கும்பல்' என்றும், 'கூலிகள்' என்றும், 'எப்போது கைது' என்றும் நாள் தவறாது சிறப்பு செய்திகள். தம் எதிர்காலத்துக்காகவும் சந்ததியினருக்காகவும் போராடும் மக்களைத் தீவிரவாதிகளை விடக் கேவலமாகச் சித்தரிப்பதை நடுநிலை மக்கள் எப்படி ஜீரணிக்க முடியும். செய்திகளை வெளியிடாமல் கருத்துகளையே செய்திகளாக வெளியிடும் தினமலருக்கும் நக்கீரனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது ? ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தினகரன் நாளிதழ் ஒரு ரூபாய்க்குக் கொடுத்தபோதும், ஜெயேந்திரர் கைதின்போதும் தினமலர் வாசித்தவர்களுக்கு அதன் சாயம் தெரியும்.
Saturday, November 19, 2011
சிரியாவா, சவூதியா ? - கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
Sunday, October 30, 2011
கடலுக்கப்பால் காந்தியப் போராட்டம் - வரலாற்றுத் தருணம்
எகிப்தில் துவங்கிய அரபு வசந்தத்தின் பாதிப்பில் இந்த செப்டம்பர் இரண்டாம் வாரம் நியூயார்க் நகரில் 'வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம்' சில நூறு பேர்களுடன் தொடங்கியது. பொதுப் பிரச்னைக்காக அமெரிக்க மக்கள் சாதாரணமாகப் போராட்டங்கள் எதுவும் நடத்துவதில்லை. சனி-ஞாயிறு கிழமைகளில் மதியம் ஆரம்பித்து இரவு வரை தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகள் காட்டி மக்களைக் காயடித்து வைத்திருப்பார்கள். வம்பு வழக்குகளில் சிக்கினால் கடைசி வரை எழுந்திருக்கவே முடியாது என்ற பயமும் ஒரு காரணம். ரீகன் காலம் தொடங்கி கட்டுப்பாடுகள் நீங்கிய பகாசுர நிதி நிறுவனங்களின் கார்ப்பரேட் மெகா ஊழல்கள் படிப்பவர் கண்களைப் பிதுக்க வைக்கும். மக்களின் வாழ்வாதாரங்களை இவர்கள் சுரண்டிய விதம் ஹாலிவுட் படங்களை மிஞ்சிய சாகசங்கள். இவர்கள் போடும் எலும்புத் துண்டுகளுக்காக அனைத்து சட்டங்களை இயற்றியும் வளைத்தும் செநேட்டர்களும் ஜட்ஜுகளும் பணிந்து கிடக்கிறார்கள் . தேர்ந்த கணித விற்பன்னர்களையும் பிசிக்ஸ் நிபுணர்களையும் வைத்து இவர்கள் ஆடிய சூதாட்டங்கள் மனிதக் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை. கடனில் சிக்கி வீடிழந்தவர்களும், உற்பத்தியை வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்றதால் வேலை இழந்தவர்களும் இத்தனை நாட்கள் கார்ப்பரேட்-அரசாங்க-நீதிமன்ற கூட்டுச் சதிக்கு ஈடு கொடுக்க முடியாமல் உள்ளுக்குள் குமுறியபடியே விதியை நொந்தபடியே நாட்களைத் தள்ளி வந்தார்கள். ஐரோப்பிய நாடுகளைப் போலெல்லாம் அமெரிக்காவில் ஒருநாளும் மக்கள் வெளியே வந்து போராட மாட்டார்கள் என்றே பலரும் நம்பி வந்தோம். ஏனென்றால் நிஜத்தில் அமெரிக்கர்கள் மிகவும் பயந்தவர்கள்.
Tuesday, September 6, 2011
சேதம் - நாவல் - கபாலிக்குத் தபால்
ஒலகத்துலேயே பெரிய அறிவாளியான அண்ணாத்தை கபாலிக்கு, சிஸ்யன் துலுக்காணத்தோட தபால்.
வெசயம் இன்னான்னா, நேத்து நம்ம மஜீத் பாயோட பழைய பேப்பர் கடையில ஓரமா நின்னுக்குனு பலான பலான புஸ்தகத்தலாம் நைசா பொரட்டிப் பாத்துக்கனு இருக்க சொல்ல, ஒம்பேரு போட்டு, 'சேதம்' அப்டீன்னு அதுங்களுக்கு நடுவுல ஒரு புஸ்தகம். பாயாண்ட போயி, 'இன்ன பாய், நம்ம குருநாதரோட பொஸ்தகத்த ஞாபகமில்லாம பலான பொஸ்தகத்துக்கு நடுவுல மறந்து போயி வெச்சிட்டியே' அப்டீன்னு சொன்னேன். அதுக்கு பாயி, 'போடா பொறம்போக்கு. கபாலி போட்ட 'சேதம்' பொஸ்தகத்த அங்க வெக்கறதக்குக் கூடக் கூச்சமா இருக்குதுடா' ன்றாரு. இப்பதான் எல்லாமே நெனப்புக்கு வருது.
Subscribe to:
Posts (Atom)








