நான்கு மாதங்களாகக் கடுமையான பணிச்சுமை. வெளியே மழை பெய்கிறதா என்று கூடத் தெரியாமல் தினமும் முப்பது மணி நேரம் வேலை. கணி மொழியை நிரடி நிரடிப் பூச்சிப் பிடித்துக் கொண்டிருந்தேன். புத்தாண்டு தொடங்கி இரண்டு நாட்கள் ரிலாக்ஸ் செய்ய பழைய உள்ளூர் வெளியூர் செய்திகளை வாசித்தால், அங்கும் கனிமொழி-நிரா ரடியா செய்திகள். உலகமே 4 -G பயன்படுத்த ஆரம்பித்து விட்டது, நீங்கள் இப்போதுதான் 2 -G யில் ஊழல் செய்கிறீர்களா? சீக்கிரம் வந்து 4 -G ' யிலும் உங்க தெறமயக் காட்டுங்க. இதிலே நோக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம். அனைத்து மீடியாக்களும், அரசியல் வியாதிகளும், சேவகர்களும், பரபரப்பு டீ.வீ. மற்றும் 'சோ' போன்ற 'சிந்தனை'யாளர்களும், ராசாவையும் கனிமொழியையும் மட்டுமே தாக்குகிறார்கள், ஆனால் இந்த ஊழலைத்தூண்டி, அதனால் பலன் அடைந்த ரத்தன் டாட்டாவைப் பற்றியோ, மும்பை அம்பானி பிரதர்ஸ் பற்றியோ மறந்தும் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார்கள். இந்தியா உண்மையிலேயே இந்த விஷயத்தில் (முதலாளிகளின் காலில் விழுவது ) அமெரிக்காவை மிஞ்சி விட்டது. அமெரிக்கா, வெல்கம் டு இந்தியா. சமீபத்தில் 'நோபலுக்கு மேல்' எழுத்தாளர் & கம்பெனி புத்தக வெளியீட்டைப் பப்ளிசிட்டி பண்ணிய விதம் அட்டகாசமாக இருந்தது. தொடர் தோல்விப் படங்களால் நொந்து போயிருந்த இளைய தளபதி விஜய், இதைப் பார்த்து அவர்களிடம் தம் அடுத்த படத்தின் விளம்பர கான்ட்டிராக்டைக் கொடுத்திருக்கிறாராம்.
வெளியூர் சேதி இப்படி இருக்கையில், இங்கே ஒரு குறுஞ்செய்தி. அனைத்துத் தென் மாகாணங்களிலும் 'மூளை குன்றியோர்' காப்பகங்களில் எல்லோரையும் டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். கேட்டால், நவம்பர்-2010 தேர்தலில் அவர்கள் அனைவரும் ரிபப்ளிக்கன் கட்சி சார்பில் வெற்றி பெற்று விட்டார்களாம். இனிமேல் இந்த ரிபப்ளிக்கன் cynical bas ****s நடத்தும் கூத்துகளைப் பார்த்தால் பகுத்தறிவுள்ள எவருக்கும் ரத்தக்கொதிப்பு, மண்டையிடி உள்ளிட்ட உடல் உபாதைகள் கியாரன்ட்டியாக வரும். போதாதற்கு நந்தவனம் போல் இருந்த என்னுடைய ஆபீசை, இந்த வாரத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றி விட்டார்கள். புதிய இடம், பாண்டிச்சேரி பழைய பஸ் ஸ்டாண்டில் இருக்கும் நியூட்டன் தியேட்டர் போல இருக்கிறது. இன்னும் இன்ன பிற காரணங்களால் லோக்கல் அரசியல் செய்திகள் எதையும் ஆறு மாதங்களுக்குப் பார்ப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.
அடுத்து வரும் பதிவுகளில் கணினி உள்கட்டமைப்புப் பற்றி ஏதாவது கிறுக்கலாம், அது எனக்காவது ஒரு விதத்தில் உதவியாக இருக்கும்.
அதற்கு முன், ரிலாக்சுக்காக ஒரு சுவையான தகவல்.
"பழைய இலக்கியங்களில் இருந்து கருத்துக்களை அப்படியே எடுத்துப் பாடல்களில் உபயோகப் படுத்துகிறீர்களே" என்று கண்ணதாசனிடம் கேட்க, "தாத்தாவின் சட்டைப் பையிலிருந்து பேரப்பிள்ளைகள் செலவுக்குச் சில்லறை எடுப்பதில்லையா? எனக்குப் பழைய இலக்கியங்கள் தாத்தாவின் சட்டைப் பை மாதிரி. உரிமையுடன் தேவைப்படும்போது எடுத்துக் கொள்கிறேன்" என்றார். அப்படி அவர் ஒரு பீஸ் எடுத்துப் புகுத்திய பாடலைப் பார்ப்போம்.
கீழ்கண்டது வள்ளல் சீதக்காதியைப் பற்றிப் படிக்காசுப் புலவர் பாடியது.
காய்ந்து சிவந்தது சூரிய காந்தி, கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண், தொலைவில்பன்னூல்
ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம், அனுதினமும்
ஈந்து சிவந்தது மால்சீதக் காதி இருகரமே. -- படிக்காசுப் புலவர்
இந்தப் பாடலைக் 'கர்ணன்' படத்தில் வரும் மிகப் பிரபலமான பாடலில் கையாண்ட விதம் இதோ.
Showing posts with label கண்ணதாசன். Show all posts
Showing posts with label கண்ணதாசன். Show all posts
Sunday, January 9, 2011
Wednesday, July 22, 2009
கண்ணதாசனின் ரசவாதம் - 2
நாம் படிக்கும் பருவத்தில் இதைப் பார்த்திருப்போம். சிலர் வாழ்க்கையில் நன்றாக மேலே வருவர் என்றும், சிலர் தேற மாட்டர்கள் என்றும் பரவலாக அபிப்பிராயம் இருக்கும். வருடங்கள் வேகமாக உருண்டோடிய பின்னர் திரும்பிப் பார்த்தால், அனுமானங்கள் பெரும்பாலும் தவறாகிப் போயிருக்கும். என்னுடைய ஊரில், மீசை அரும்பிய பருவத்தில் ஒன்றாக விளையாடியவன். ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது. நன்று தேர்ந்த ரசனையும் கூர்மையான அறிவும் ஆளுமையும் உடையவன்.
"நம்ம மேற்படி ஆளு ஒன்னு மந்திரியா வருவான், இல்லாட்டி பிரான்ஸ் போய் செட்டில் ஆவான் பாத்துக்கோயேன்" , என்பது அவனைப் பற்றிப் பொதுவான பேச்சாக இருக்கும். நான் மற்றும் இன்னொரு நண்பன் பொறியியல் கல்லூரிக்கும், அவன் அங்கே கலைக் கல்லூரியிலும் படிக்கப் போனோம். இடையில் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவன் படிப்பையும் முடிக்கவில்லை, ஆளும் உருக் குலைந்து இருந்தான். ஆனால் எந்தக் கெட்ட சகவாசமும் இல்லை. பல நாள் வேளை கிடைக்காமல் அலைந்து விட்டு தன் அண்ணன் உதவியில் சின்ன வெற்றிலைக் கடை வைத்து உட்கார்ந்து விட்டான். கிண்டலும் புன்னகையும் மட்டும் மாறவில்லை. கடையில் அக்கௌன்ட் வைத்திருப்பவர்கள் மேலும் கடன் கேட்டால், " 'பற்று' மிகுந்து வரப் பார்க்கின்றேன்.... என் அண்ணனால் பட்டு வரும் இம்சைகள் பேசி முடிவதில்லை... " என்று பாரதியின் கண்ணன் பாட்டின் உல்ட்டா வேறெ.
சரி, விஷயத்துக்கு வருவோம். கம்ப ராமாயணம் படித்தவர்கள் மிகவும் சிலாகிக்கும் தத்துவ வரிகள். இராமனைக் காட்டுக்கு அனுப்பும் செய்தி கேட்டு இலக்குவன் அதீதக் கோபம் கொண்டபோது, அவனுக்கு இராமன் கூறியது இது.
"நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, அற்றே
பதியின் பிழையன்று, பயந்து நமைப்புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று, மைந்த,
விதியின் பிழை நீ இதற்கு என்கொல் வெகுண்டதென்றான்"
-- ஆற்றில் நல்ல தண்ணீர் இல்லாமல் போனால் அது அந்த ஆற்றின் குற்றம் இல்லை. ( அரசியல்வாதியின் குற்றமா என்று கேட்காதீர்கள். அது போன மாசம், இது இந்த மாசம் ). நம்முடைய தந்தையின் பிழையோ நம்மை வளர்த்த தாயின் அறிவின் பிழையும் அன்று.
அந்த்தத் தாயின் மகன் பரதனின் பிழையும் அன்று.
இது விதியின் பிழை. இதற்கு ஏன் பெரும் கோபம் கொள்கிறாய்.
இதை, கம்பனின் தீராக் காதலனான நம் கவிஞர் கண்ணதாசன் அற்புதமாக உள் வாங்கி நமக்குக் கொடுத்திருப்பார். 'தியாகம்' படத்தில் வரும்
"நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை,
விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா"
என்ற பாடலைக் கேட்டதுண்டா ?
மன வலிமை மிக்கத் துணைவி:
தன் கணவன் வலிமையானவனாக இருக்க வேண்டும் என்று மனைவி நினைப்பது போல், தன் மனைவிக்கும் மன உறுதி வேண்டும் என்றும் கணவனும் நினைப்பான். அப்படி ஒரு மன உறுதி வாய்ந்த ஒரு பெண்ணை சங்கப் பாடல் படம் பிடித்துக் காட்டுவதைப் பாருங்கள்.
பின்னணி:
சோழ மன்னன் கரிகாலனின் மகள் ஆதிமந்தி; ஆடல் பாடலில் வல்லவள். சேரநாட்டரசனான ஆட்டனத்தி இவளுடைய கணவன். இருவரும் காவிரியின் புதுப்புனல் விழாவில் நீராடி மகிழ்ந்தபோது, நீர்ப்பெருக்கு ஆட்டனத்தியை இழுத்துச் சென்றுவிடுகிறது. அழுது சிவந்த கண்களோடு கணவனைத் தேடுகிறாள் ஆதிமந்தி. அவளுடைய நிலையைக் கண்டு காவிரியே ஆட்டனத்தியைக் கடற்கரையில் சேர்க்கிறது. காவிரி கடலில் கலக்கும் இடத்தில் ஒரு பெண்ணால் காப்பாற்றப்பட்ட கணவனைக் காண்கிறாள் ஆதிமந்தி.
" அவனை எங்கும் காணவில்லை, வீர விளையாட்டு விளையாடும் மல்லர்கள் மத்தியிலும் காணவில்லை
அழகாக, ஜோடியாக, நெருக்கமாக ஆடும் நடனப் பெண்கள் மத்தியிலும் அவனைக் காணவில்லை
ஏன் காதலனை எங்கு தேடியும் மறைந்த என் மன்னனைக் காணவில்லையே.
நானும் ஆடல் மகள்தான். மெலியும், என் கையில் அணிந்த சங்கு வளையல்கள், வருத்தத்தால் நெகிழ்ந்து விழுகின்றனவே.
அவனை எங்கேனும் கண்டால் சொல்லுங்கள். அவனும் ஒரு ஆடல் மன்னன்தான் "
இப்போது இது கண்ணதாசன் கைவண்ணத்தில் அற்புதமான திரைப் பாடலாக உருமாறுவதைப் பாருங்கள். சங்க இலக்கியத்தை நாமெல்லோரும் ரசிக்கக் கொடுத்த அந்தக் கவிஞன்வாழ்க.
படம்: மகாதேவி. தன் கணவன் எந்த நிலையில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள இயலாமல் பத்மினி உருகிப் பாடுகிறார்.
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்.. சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
தொடர்புடையது: கண்ணதாசனின் ரசவாதம்-1

பாடல் :
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.
-- குறுந்தொகை
" அவனை எங்கும் காணவில்லை, வீர விளையாட்டு விளையாடும் மல்லர்கள் மத்தியிலும் காணவில்லை
அழகாக, ஜோடியாக, நெருக்கமாக ஆடும் நடனப் பெண்கள் மத்தியிலும் அவனைக் காணவில்லை
ஏன் காதலனை எங்கு தேடியும் மறைந்த என் மன்னனைக் காணவில்லையே.
நானும் ஆடல் மகள்தான். மெலியும், என் கையில் அணிந்த சங்கு வளையல்கள், வருத்தத்தால் நெகிழ்ந்து விழுகின்றனவே.
அவனை எங்கேனும் கண்டால் சொல்லுங்கள். அவனும் ஒரு ஆடல் மன்னன்தான் "
இப்போது இது கண்ணதாசன் கைவண்ணத்தில் அற்புதமான திரைப் பாடலாக உருமாறுவதைப் பாருங்கள். சங்க இலக்கியத்தை நாமெல்லோரும் ரசிக்கக் கொடுத்த அந்தக் கவிஞன்வாழ்க.
படம்: மகாதேவி. தன் கணவன் எந்த நிலையில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள இயலாமல் பத்மினி உருகிப் பாடுகிறார்.
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்.. சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
தொடர்புடையது: கண்ணதாசனின் ரசவாதம்-1
Thursday, July 9, 2009
கண்ணதாசனின் ரசவாதம் - 1

Disclaimer: கீழ்கண்டவை முழுமையும் என் சொந்த சரக்கல்ல. நான் பல புத்தகங்களில், பல இடங்களில் படித்தவற்றின் பாதிப்பே ஆகும்.
புகழ் பெற்ற இரண்டு ஒப்பாரிப் பாடல்களைக் கவியரசு கண்ணதாசன் அழகிய காதல் பாடல்களாக ரசவாதம் செய்யும் வித்தையை இங்குப் பார்ப்போம்.
1. மன்னன் பாரியின் பெண்கள், அங்கவை, சங்கவை. இவர்கள், தந்தையையும், நாட்டையும் இழந்து, ஆதரவற்ற நிலையில் ஆற்றாமையில் குமையும் கீழ்கண்ட காட்சியைப் பாருங்கள். ஒரு மதிய வேளையில் தனியே உட்கார்ந்து படித்தால், அப்படியே கண்ணீர் வருகிறது.
"அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்று ஏறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!"
(புறநானூறு)
விளக்கம்:
அன்றொரு நாள் இந்த வெண்ணிலவு வானில் நீந்தி வருகையில்
எங்கள் தந்தையின் அருகாமையில் இருந்தோம்.
எங்கள் பறம்பு மலையையும் பிறர் கவராமலிருந்தார்.
அன்று காய்ந்த அதே வெண்ணிலவு தான் இன்றும் காய்கிறது.
நிலவு இருக்கிறதே தவிர, இப்போது எம் தந்தை இல்லை எமதருகில்..
பகை வேந்தர், எம் குன்றையும் (நாட்டையும் ) கைப்பற்றிக் கொண்டார், ஐயா!
இதோ கவியரசின் ரசவாதம். ஒப்பாரி, அழகான காதல் பாடலாகிறது பாருங்கள்.
"அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகில்
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை, நீ அறிவாயே வெண்ணிலவே.
அந்த ஒரு நாள் ஆனந்தத் திருநாள், இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன், பாவை மேனியிலே..
நீ பார்த்தாயே வெண்ணிலவே."
ஐயோ........... எங்கேயோ சும்மா சொக்கித் தூக்கிக்கொண்டு போகிறதே!
==============================
2. இப்போது, நெஞ்சை உருக்கும் ஒரு நாட்டுப்புற ஒப்பாரி.
"சில்லென்று பூத்த சிறு நெரிஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிற்க வழி போனீரே"
வாழ்க்கை எனும் பாதையின் இரு பக்கத்திலும் மரகதப் பாய் விரித்தது போல் பசும்புல் தரை. அதன் மேல் ஆங்காங்கே நெரிஞ்சியின் மஞ்சள் பூக்கள் மங்களகரமாகக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. கணவன் அவளைத் தனித்து விட்டுச் சென்று விடுகிறான் ( இறந்து விடுகிறான் ). இவளோ செல்லும் வழி தெரியாமல், கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் நெரிஞ்சி முள்ளின் மேல் காலை வைத்து விடுகிறாள். முள் குத்தி, கால்கள் காயம் படுகின்றன. கணவனுடன் இருந்தபோது மஞ்சள் பூப்போல இருந்த உறவினர்கள், அவன் இறந்ததும், முட்களாகக் குத்துகின்றனர். நம் வாழ்விலே எத்தனையோ பேரை இதுபோல துன்பமான சூழ்நிலையில் பார்த்திருப்போம். இயலாமையில் கண்ணீர்தான் வருகின்றது.
கவியரசு இதை விருத்தமாக வைத்து எழுதி, டீ.ஆர். மகாலிங்கம் தன்னுடைய ட்ரேட் மார்க் சிரிப்புடன், காதல் பாட்டாகப் பாடுவார். அப்போதெல்லாம் இது ஒரு பிலாக்கணப் பாட்டு என்றே எனக்குத்தெரியவில்லை.
"சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்.....
செந்தமிழ் தென் மொழியாள்.. நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்..
பைங்கனி இதழில் பழரசம் தருவாள், பருகிட தலை குனிவாள்"
எச்சரிக்கை: மேலும் தொடரலாம்...
Subscribe to:
Posts (Atom)