கடந்த ஒரு மாதமாக கோடிக்கணக்கான ரசிகர்களின் நினைவையும் கனவையும் ஆக்கிரமித்திருந்த உலகக் கால் பந்துப் போட்டி நேற்று முடிந்தது. யாருமே எதிர்பார்க்காத இரு அணிகள் இறுதிச் சுற்றில் மோதின. நெதர்லாந்து அணியினரை எனக்கென்னவோ ஆரம்ப சுற்றுகளில் இருந்தே பிடிக்கவில்லை. பௌல் (foul) செய்வதில் குறையே வைக்காமல், ஆடிய எல்லா ஆட்டங்களையும் நெதர்லாந்தினர் சுவாரஸ்யம் குறைந்ததாய் ஆக்கியிருந்தார்கள். இங்கு யு.எஸ் டீவீ சானல்களில் முடிந்தவரை உலகக் கோப்பைப் போட்டிகள் பற்றி எந்த சானலிலும் மூச்சு விடவில்லை.