பழக்கப்பட்ட பெட்டிக்கடை
பின்னால் மறைந்து நின்று கொண்டு செல்போனில் மெல்லிய குரலில் துலுக்காணம்:
"தோ, மாமு, நாகர்கோயிலு எஸ்ப்ரஸ்ல இருந்து கெஜாவும், மாமங்காரன்
கன்ஸாமியும், கூட கொஞ்சம்பேரும் செட்டா வர்றானுங்கபா. கோனாரு இப்ப
கொக்கியக் கூட்டிக்னு டேசன் நடு சென்டர்ல நிறுத்தராம்பா. அப்ப கோவாலு
சொன்னத நான் உன்னாண்ட சொல்றேன்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், என்னுடைய நண்பர் ஒருவர், மிகவும் சிறப்பான, வித்தியாசமான ஓர் தமிழ்ப்படம் வந்திருப்பதாகவும், அதை நான அவசியம் பார்க்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்தார். எப்போதுமே என்னை வம்பில் மாட்டி விடுவது அவரது பொழுது போக்கு என்பதையும் மறந்து அந்தப் படத்தைப் பார்த்தேன். அந்த பாதிப்பில் எழுதப்படுவதுதான் இந்த கோனார் நோட்ஸ். இந்தக் கையேடு, அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு உதவும் நோக்கில் எழுப்படுகிறது.
முதலில் பார்க்க வேண்டியது பட்ஜெட். பெரிய அளவில் நிதியுதவி கிடைத்தால், வெளிநாடு லொக்கேஷன்கள் மற்றும் நூறு ரவுடிகள் என்று திட்டம் போடலாம். ஆனால், வித்தியாசமானப் படம் எடுக்க வருபவரிடம் அவ்வளவாகப் பணம் இருக்காது என்பதால் மிகவும் பின் தங்கிய கிராமத்தை லோக்கேஷனாகவும், கதாநாயகனையே ரவுடியாக மாற்றுவதும் சாலச் சிறந்தது.
நான்கு மாதங்களாகக் கடுமையான பணிச்சுமை. வெளியே மழை பெய்கிறதா என்று கூடத் தெரியாமல் தினமும் முப்பது மணி நேரம் வேலை. கணி மொழியை நிரடி நிரடிப் பூச்சிப் பிடித்துக் கொண்டிருந்தேன். புத்தாண்டு தொடங்கி இரண்டு நாட்கள் ரிலாக்ஸ் செய்ய பழைய உள்ளூர் வெளியூர் செய்திகளை வாசித்தால், அங்கும் கனிமொழி-நிரா ரடியா செய்திகள். உலகமே 4 -G பயன்படுத்த ஆரம்பித்து விட்டது, நீங்கள் இப்போதுதான் 2 -G யில் ஊழல் செய்கிறீர்களா? சீக்கிரம் வந்து 4 -G ' யிலும் உங்க தெறமயக் காட்டுங்க. இதிலே நோக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம். அனைத்து மீடியாக்களும், அரசியல் வியாதிகளும், சேவகர்களும், பரபரப்பு டீ.வீ. மற்றும் 'சோ' போன்ற 'சிந்தனை'யாளர்களும், ராசாவையும் கனிமொழியையும் மட்டுமே தாக்குகிறார்கள், ஆனால் இந்த ஊழலைத்தூண்டி, அதனால் பலன் அடைந்த ரத்தன் டாட்டாவைப் பற்றியோ, மும்பை அம்பானி பிரதர்ஸ் பற்றியோ மறந்தும் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார்கள். இந்தியா உண்மையிலேயே இந்த விஷயத்தில் (முதலாளிகளின் காலில் விழுவது ) அமெரிக்காவை மிஞ்சி விட்டது. அமெரிக்கா, வெல்கம் டு இந்தியா. சமீபத்தில் 'நோபலுக்கு மேல்' எழுத்தாளர் & கம்பெனி புத்தக வெளியீட்டைப் பப்ளிசிட்டி பண்ணிய விதம் அட்டகாசமாக இருந்தது. தொடர் தோல்விப் படங்களால் நொந்து போயிருந்த இளைய தளபதி விஜய், இதைப் பார்த்து அவர்களிடம் தம் அடுத்த படத்தின் விளம்பர கான்ட்டிராக்டைக் கொடுத்திருக்கிறாராம்.
வெளியூர் சேதி இப்படி இருக்கையில், இங்கே ஒரு குறுஞ்செய்தி. அனைத்துத் தென் மாகாணங்களிலும் 'மூளை குன்றியோர்' காப்பகங்களில் எல்லோரையும் டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். கேட்டால், நவம்பர்-2010 தேர்தலில் அவர்கள் அனைவரும் ரிபப்ளிக்கன் கட்சி சார்பில் வெற்றி பெற்று விட்டார்களாம். இனிமேல் இந்த ரிபப்ளிக்கன் cynical bas ****s நடத்தும் கூத்துகளைப் பார்த்தால் பகுத்தறிவுள்ள எவருக்கும் ரத்தக்கொதிப்பு, மண்டையிடி உள்ளிட்ட உடல் உபாதைகள் கியாரன்ட்டியாக வரும். போதாதற்கு நந்தவனம் போல் இருந்த என்னுடைய ஆபீசை, இந்த வாரத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றி விட்டார்கள். புதிய இடம், பாண்டிச்சேரி பழைய பஸ் ஸ்டாண்டில் இருக்கும் நியூட்டன் தியேட்டர் போல இருக்கிறது. இன்னும் இன்ன பிற காரணங்களால் லோக்கல் அரசியல் செய்திகள் எதையும் ஆறு மாதங்களுக்குப் பார்ப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.
அடுத்து வரும் பதிவுகளில் கணினி உள்கட்டமைப்புப் பற்றி ஏதாவது கிறுக்கலாம், அது எனக்காவது ஒரு விதத்தில் உதவியாக இருக்கும்.
அதற்கு முன், ரிலாக்சுக்காக ஒரு சுவையான தகவல்.
"பழைய இலக்கியங்களில் இருந்து கருத்துக்களை அப்படியே எடுத்துப் பாடல்களில் உபயோகப் படுத்துகிறீர்களே" என்று கண்ணதாசனிடம் கேட்க, "தாத்தாவின் சட்டைப் பையிலிருந்து பேரப்பிள்ளைகள் செலவுக்குச் சில்லறை எடுப்பதில்லையா? எனக்குப் பழைய இலக்கியங்கள் தாத்தாவின் சட்டைப் பை மாதிரி. உரிமையுடன் தேவைப்படும்போது எடுத்துக் கொள்கிறேன்" என்றார். அப்படி அவர் ஒரு பீஸ் எடுத்துப் புகுத்திய பாடலைப் பார்ப்போம்.
கீழ்கண்டது வள்ளல் சீதக்காதியைப் பற்றிப் படிக்காசுப் புலவர் பாடியது.
காய்ந்து சிவந்தது சூரிய காந்தி, கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண், தொலைவில்பன்னூல்
ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம், அனுதினமும்
ஈந்து சிவந்தது மால்சீதக் காதி இருகரமே. -- படிக்காசுப் புலவர்
இந்தப் பாடலைக் 'கர்ணன்' படத்தில் வரும் மிகப் பிரபலமான பாடலில் கையாண்ட விதம் இதோ.
முன் குறிப்பு: சமீபத்தில் 'காசேதான் கடவுளடா' பதினைந்தாவது முறை பார்த்த பாதிப்பில் சென்னையின் தேவபாஷையில் எழுதிப்பார்த்தது இது. கட்டுரை யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடவில்லை. அப்படித் தோன்றினால் கம்பெனி பொறுப்பேற்காது.
=======================
இதை தேங்காய் சீனிவாசன் சொல்வது மாதிரி கற்பனை செய்து கொள்ளுங்கள்..
( இந்தக் கடிதத்தைப் பிரபல எழுத்தாளர்களுக்கு அனுப்பினால் நிச்சயம் நிராகரிக்கப்பட்டு விடும் என்பதால் என்னுடைய வலைப்பக்கத்திலேயே கவர் ஸ்டோரியாக மிகுந்த அவமானத்துடன் பதிவேற்றம் செய்கிறேன் )
முதலில் ஒரு டிஸ்க்ளைமர்: இசையை ரசிப்பதில் நான் ஒரு ஞான சூன்யம் என்பதால், சினிமா பாடலில் குறைந்தபட்சம் 50 சதவிகிதமாவது புரிந்தால்தான் கேட்பேன். அதனாலேயே இளையராஜாவுக்குப் பின்னர் வந்த எவரையும் ரசிக்க முடியவில்லை.
போன வாரம் ஒரு நண்பருடன் அவரது காரில் சென்று கொண்டிருந்தேன். என் நண்பரோ, புரியுதோ இல்லையோ, தமிழ், இந்தி என்று கலந்து கட்டி,
ஓரிரு வாரங்களில் இங்கு ஆஸ்டின் நகரில் 'சுறா' திரையிடப்படலாம் என்றும், அப்படி வந்தால் போய்ப் பார்த்து விட்டு வரலாமா என்றும் இரண்டு நாட்களுக்கு முன் என் சகதர்மினி கேட்டாள். ஏற்கனவே இணையத்தில் ஆளாளுக்கு சுறாவை அடித்துப் புட்டு வைத்திருப்பதைப் பார்க்கவில்லை போலும். என்னடா இது வம்பாகப் போகிறதே என்று, இன்னும் இரண்டு மாதங்களுக்கு எனக்கு ஆபீஸ் வேலை அதிகம் இருப்பதாகச் சொல்லி வைத்தேன். ஒருவேளை தன் தோழியரோடு போய் அதைப் பார்த்து வரக்கூடும் என்ற ஆபத்தும் இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று 'தங்கப்பதக்கம்' பாடலை மனப்பாடம் செய்து கொண்டேன். இந்த மாதிரி சூழ்நிலைகளை எதிர்கொள்ள கவியரசர் அப்போதே பாடிவிட்டார் பாருங்கள்.
போன மாதம் முழுதும் கால்ப் வீரர் டைகர் உட்சுடன் படுத்தப் பொன்னிறக் கூந்தல் அழகிகளின் பட்டியல் வளர வளர, அது நாள் வரை புத்தர் வேஷம் போட்ட டைகர் உட்சுக்கு எதிர்பாராத இடமாக, பாக்ஸ் (பொய்) நியூஸ் (fox News ) அறிவிப்பாளர் ஒருவரிடமிருந்து அறிவுரை வந்தது. அதாவது, அவர் உடனே தன்னுடைய புத்த மதத்தை விட்டு, கிறித்துவ மதத்துக்கு வந்தால், அவர் எதிர்பார்ப்பதை விட அதிகம் பாவ மன்னிப்புக் கிடைக்கும் என்பதாகும். மார்க்கெட் சந்தர்ப்பத்தை எப்போதும் நழுவ விடாத பல சர்ச்சுகள் போட்டி போட்டுக் கொண்டு டைகருக்கு கவர்ச்சிகரமான ஆபர்கள் வழங்கின. டைகர் தம் சர்ச்சுக்கு வந்தால் பாவமன்னிப்பு வழங்கத் தேவையான தொகையில் 50% வரைத் தள்ளுபடி