Showing posts with label tea party. Show all posts
Showing posts with label tea party. Show all posts
Saturday, November 13, 2010
சென்ற வார இடைத்தேர்தல் - குடலாப்பரேஷன்
சென்ற வாரம் இடைத்தேர்தலில் வாக்களிக்க நாங்கள் வரிசையில் நின்றபோதே முடிவு ஓரளவு தெரிந்து விட்டது. அந்த வரிசையில் நாங்கள் இருவர் மட்டுமே பழுப்பு நிறத்தவர். பல வாக்குச்சாவடிகளில், அதிகாலையில் இருந்தே வயதான வெள்ளையர்கள் குவியத் தொடங்கி விட்டனர். ரிப்பப்ளிக்கன் கட்சியினரின் 'பயங்காட்டும்' பலமுனைப் பிரச்சாரம் நன்றாக வேலை செய்திருந்தது. மாலையில் பிரதிநிதிகள் அவையில் பெரும்பாலான இடங்களை டெமாக்ரட் கட்சியினர் இழந்த செய்திகள் வரத்தொடங்கி விட்டன. அவையின் உறுப்பினர்களுக்கும், விட்டுப்போன மற்றும் காலியான செனேட் இடங்களுக்கும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவில் தேர்தல் வருவதால் இங்கு தேர்தல் நிதி திரட்டுவதும், பிரச்சாரம் செய்வதும் பல வடிவங்களில் வருடம் முழுதும் நடந்து கொண்டே இருக்கும். இதனால் ஊடகக் கூத்தாடிகளுக்கும், காத்தாடிகளுக்கும், கருத்துரைஞர்களுக்கும் எப்போதும் திருவிழாதான். போதாக்குறைக்கு அனைத்து ஊடகங்களிலும் நாளொன்றுக்கு இரண்டு மூன்று கருத்துக் கணிப்புகள் (திணிப்புகள்!).
Wednesday, September 15, 2010
நானே நல்ல ஏய்ப்பன்
தலைப்பைப் பார்த்ததும், ஏதோ பைனான்ஸ் அல்லது சுவிசேஷ கம்பெனி பற்றிய மற்றொரு மொக்கை என்று நினைக்க வேண்டாம். இது இந்தப்பக்கம் அமெரிக்காவில் தினந்தினம் நடக்கும் மக்கள் போராட்டங்கள் பற்றிய பதிவு. பொதுமக்கள் நடத்தும் ஜனநாயக முறைப் போராட்டங்கள் நடத்த அமெரிக்காவில் காரணங்கள் நிறைய உள்ளன. முடிவில்லாத யுத்தங்கள், வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம், பங்குச்சந்தை சரிவு, ஒரே வாரத்தில் வீட்டையும் சொத்தையும் இழப்பது, பெரும் செல்வர்கள் மேலும் செல்வந்தர்களாவது, இப்படிப் பல. ஆனால் இந்த நியாயமான காரணங்களுக்காக இங்கு எந்த மக்கள் போராட்டமும் நடப்பதில்லை. ஒரு கலப்பின ஆசாமி அமெரிக்க ஜனாதிபதியாக ஆனாலும் ஆனார், வாரம்தோறும் சனி ஞாயிறு வருகிறதோ இல்லையோ, நாட்டின் தலைநகர், மாநிலத் தலை நகர், இங்கெல்லாம் கோவக்கார வெள்ளைக்காரர்கள் தொடர்ந்து ஊர்வலங்களும், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். நேரடியாக 'கறுப்பர் அதிபரானது பிடிக்கவில்லை' என்று சொல்ல முடியாது. அதனால் லூசுத்தனமாக வேறு காரணங்களை முன்வைக்கின்றனர்.
Subscribe to:
Posts (Atom)
