புலம் பெயர்ந்த மகளிரின் சாதி ஆர்வம்
சில நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் ஜெமோவின் வலைத்தளத்தில் சாதியுடன் புழங்குதல் பற்றி விவாதங்கள் நிகழ்ந்தன. அதில் பலர், பெண்கள் அவ்வளவாக சாதியைப் பற்றிக் கவலைப் படுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். என்னுடைய அனுமானத்தில் ஆண்களை விடப் பெண்களே, அதிலும் குறிப்பாக அமெரிக்க வாசி மாமிகள் மிக அதிகமாகவே ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு விருந்தினர் வீட்டுக்குப் போனால், புதிதாக வந்தவரின் சாதி என்னவென்று அறிந்துகொள்ள விரும்புவார்கள். கொஞ்சம் நாசூக்கான பெண்கள், அருமையாகப் பேச்சுக் கொடுத்து விபரத்தை நம் வாயிலிருந்து பிடுங்கி விடுவார்கள். நான் பார்த்த சில சுவையான சம்பவங்கள் கீழே.
Saturday, July 31, 2010
Monday, July 12, 2010
நிஜ 'உலக நாயகர்கள்'
Monday, June 14, 2010
இதையா நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்கிறோம்?
நேற்று மாலை என் மகளுடன் வீட்டின் அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்றிருந்தேன். அங்கே மணலை அளைத்துக் கதை சொல்லி விளையாடுவது 'கிண்டர்கார்டன் பட்டதாரி'யான அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நேற்று அப்படித்தான், மலையிலிருந்து ஆறு இழிந்து வந்துப் பின்னர் கடலில் கலப்பது போல் ஒரு கதை சொன்னாள். " கடல் நீர் ஆவியாகி மேகமாகிறது. பிறகு மலையில் பொழிந்து அங்கிருந்து ஆறு உருவாகி, அது கல்லையும் கரைத்துக் கொண்டு வந்து கடலில் சேர்கிறது. பிறகு அந்தக்கடலில் இருந்து நிறைய எண்ணெய் வந்து, ஆமை, பெலிக்கன், மீன் எல்லாவற்றுக்கும் எண்ணெய்க் குளியல் நடக்கிறது. ஏனென்றால் வாரா வாரம் எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பது நல்லது.." அதை கேட்டதும் எனக்கு உடனே அதிர்ச்சியாகி விட்டது. மெக்ஸிகோ குடாப்பகுதியில் இந்த பிரிட்டிஷ் பெட்ரோலியம் செய்த அட்டூழியம் இப்படி ஒரு சாதாரண இயற்கைச் சுழற்சியையே மாற்றிக் குழந்தைகளின் கற்பனையையும் எதிர்காலத்தையும் பாதித்திருக்கிறது. அழிவின் விளிம்பில் நிற்கும் கடல்சார் உயிரினங்கள்தான் எத்தனை? போதாதற்கு, கடலில் மிதக்கும் கச்சா எண்ணெயை சிதைக்க, பூச்சி மருந்து போன்ற ஏதோ ஒரு ரசாயன நச்சுப் பொருளை ஏராளமான அளவில் கடலில் கொட்டியிருக்கிறார்கள். குறைந்த பட்சம் இந்த ஆண்டின் இறுதி வரைக்கும் கசிவை சரி செய்யா முடியாதாம். அவர்களையும் ஒன்றும் செய்ய முடியாது, காரணம் அரசாங்கமே அவர்கள் சட்டைப் பையில். நைஜீரியாவில் ஷெல் கார்ப்பரேஷன் செய்யும் கொடுமை அதைவிட அதிகம். இதற்கு மேல் ஒன்றும் எழுத முடியவில்லை. நீங்களே செய்திகளைத் தேடித் படித்துக்கொள்ளுங்கள்.
Trackback: எண்ணெய்க் கசிவு பற்றி ஏன் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதிலும் ஒரு செய்தியும் இல்லை?
Thursday, June 3, 2010
இன்னாது...... மன்னாப்பா..?
முன் குறிப்பு: சமீபத்தில் 'காசேதான் கடவுளடா' பதினைந்தாவது முறை பார்த்த பாதிப்பில் சென்னையின் தேவபாஷையில் எழுதிப்பார்த்தது இது. கட்டுரை யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடவில்லை. அப்படித் தோன்றினால் கம்பெனி பொறுப்பேற்காது.
=======================
இதை தேங்காய் சீனிவாசன் சொல்வது மாதிரி கற்பனை செய்து கொள்ளுங்கள்..
சோமாரி ....மாரியப்பன் என்ன அடிச்சிட்டாண்டா! கட்சிக் கூட்டத்துக்குக் கூப்டுக்க்னு போயி மானத்த வாங்கிடாங்கடா. மொதல்லயே ரெண்டு தபா கூட்டத்துக்குக் கூப்ட்டு, பிரியாணி, சரக்கு, துட்டு எதுமே தராமா எமாத்திப்புடானுங்க. மாரியக் கேட்டா,
=======================
இதை தேங்காய் சீனிவாசன் சொல்வது மாதிரி கற்பனை செய்து கொள்ளுங்கள்..
சோமாரி ....மாரியப்பன் என்ன அடிச்சிட்டாண்டா! கட்சிக் கூட்டத்துக்குக் கூப்டுக்க்னு போயி மானத்த வாங்கிடாங்கடா. மொதல்லயே ரெண்டு தபா கூட்டத்துக்குக் கூப்ட்டு, பிரியாணி, சரக்கு, துட்டு எதுமே தராமா எமாத்திப்புடானுங்க. மாரியக் கேட்டா,
Tuesday, May 18, 2010
பிரியத்துக்குரிய சாருவுக்கு...
எழுத்தாளர் சாரு அவர்கள் ஏ.ஆர். ரஹ்மானுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதினார். அதையொட்டி சாருவுக்கு நான் எழுதும் திறந்த மடல்...
==============================
( இந்தக் கடிதத்தைப் பிரபல எழுத்தாளர்களுக்கு அனுப்பினால் நிச்சயம் நிராகரிக்கப்பட்டு விடும் என்பதால் என்னுடைய வலைப்பக்கத்திலேயே கவர் ஸ்டோரியாக மிகுந்த அவமானத்துடன் பதிவேற்றம் செய்கிறேன் )
அன்புள்ள சாரு...
அஸ்ஸலாமு அலைக்கும். (அ) ஜெய் சாய்ராம் (அ) எக்கிஸ்து சாமியார் (அ) நித்தியானந்தம் .. விடுங்க சார், எனக்கும் குழப்பமா இருக்குது.
Sunday, May 16, 2010
நாளொன்றுக்குப் பத்து லட்சம் கேலன் எண்ணெய்...
கேத்தரினா சூறையாடிய லூசியானா மாகாணக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது BP எண்ணெய்க் கம்பெனியின் ஆழ்கடலில் எண்ணெய்த் தோண்டும் நிலையம். போன மாதம் ஏற்பட்ட ஒரு வெடிப்பினால் அங்கே வரலாறு காணாத எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, ஒரு நாளில் சராசரியாக பத்து லட்சம் கேலன் எண்ணெய், கடலில் கலக்கிறது. ஒரு மாதமாக
Tuesday, May 11, 2010
ஹம்மரும் தமிழ் சினிமா நாயகர்களும்
முதலில் ஒரு டிஸ்க்ளைமர்: இசையை ரசிப்பதில் நான் ஒரு ஞான சூன்யம் என்பதால், சினிமா பாடலில் குறைந்தபட்சம் 50 சதவிகிதமாவது புரிந்தால்தான் கேட்பேன். அதனாலேயே இளையராஜாவுக்குப் பின்னர் வந்த எவரையும் ரசிக்க முடியவில்லை.
போன வாரம் ஒரு நண்பருடன் அவரது காரில் சென்று கொண்டிருந்தேன். என் நண்பரோ, புரியுதோ இல்லையோ, தமிழ், இந்தி என்று கலந்து கட்டி,
போன வாரம் ஒரு நண்பருடன் அவரது காரில் சென்று கொண்டிருந்தேன். என் நண்பரோ, புரியுதோ இல்லையோ, தமிழ், இந்தி என்று கலந்து கட்டி,
Tuesday, May 4, 2010
'சுறாக் கடிக்கு மருந்து' (அ) 'கோடம்பாக்கத்துல இன்னுமா இதக் காப்பியடிக்கல ?'
ஓரிரு வாரங்களில் இங்கு ஆஸ்டின் நகரில் 'சுறா' திரையிடப்படலாம் என்றும், அப்படி வந்தால் போய்ப் பார்த்து விட்டு வரலாமா என்றும் இரண்டு நாட்களுக்கு முன் என் சகதர்மினி கேட்டாள். ஏற்கனவே இணையத்தில் ஆளாளுக்கு சுறாவை அடித்துப் புட்டு வைத்திருப்பதைப் பார்க்கவில்லை போலும். என்னடா இது வம்பாகப் போகிறதே என்று, இன்னும் இரண்டு மாதங்களுக்கு எனக்கு ஆபீஸ் வேலை அதிகம் இருப்பதாகச் சொல்லி வைத்தேன். ஒருவேளை தன் தோழியரோடு போய் அதைப் பார்த்து வரக்கூடும் என்ற ஆபத்தும் இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று 'தங்கப்பதக்கம்' பாடலை மனப்பாடம் செய்து கொண்டேன். இந்த மாதிரி சூழ்நிலைகளை எதிர்கொள்ள கவியரசர் அப்போதே பாடிவிட்டார் பாருங்கள்.
Wednesday, April 21, 2010
பார்வதியம்மாவிடம் இருந்து பாரதத்தைக் காத்த பரமாத்மாக்கள்
போன வாரம் சென்னை விமான நிலையத்தில் தேசப் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விஷயம் நடந்தது. 75 இராணுவத்தினரைக் கொன்ற நக்சல்கள் அங்கும் வந்து விட்டனரா? இல்லை, அவர்கள் சுண்டைக்காய்கள். அதை விட மிக மிக ஆபத்தான பெண்மணி ஒருவர் இந்தியாவுக்குள் புக இருந்தார். வந்தவர் வெகு புத்திசாலித்தனமாக, ஒரு 78 வயதான, பல்வேறு நோய்களுடன் போராடும் பெண்மணி போல் வேஷம் போட்டு சக்கர நாற்காலியில்
Sunday, April 11, 2010
நித்தி கிறித்துவ மதத்தில் இணைப்பா?
போன மாதம் முழுதும் கால்ப் வீரர் டைகர் உட்சுடன் படுத்தப் பொன்னிறக் கூந்தல் அழகிகளின் பட்டியல் வளர வளர, அது நாள் வரை புத்தர் வேஷம் போட்ட டைகர் உட்சுக்கு எதிர்பாராத இடமாக, பாக்ஸ் (பொய்) நியூஸ் (fox News ) அறிவிப்பாளர் ஒருவரிடமிருந்து அறிவுரை வந்தது. அதாவது, அவர் உடனே தன்னுடைய புத்த மதத்தை விட்டு, கிறித்துவ மதத்துக்கு வந்தால், அவர் எதிர்பார்ப்பதை விட அதிகம் பாவ மன்னிப்புக் கிடைக்கும் என்பதாகும். மார்க்கெட் சந்தர்ப்பத்தை எப்போதும் நழுவ விடாத பல சர்ச்சுகள் போட்டி போட்டுக் கொண்டு டைகருக்கு கவர்ச்சிகரமான ஆபர்கள் வழங்கின. டைகர் தம் சர்ச்சுக்கு வந்தால் பாவமன்னிப்பு வழங்கத் தேவையான தொகையில் 50% வரைத் தள்ளுபடி
Saturday, March 27, 2010
செவ்வாயில் முளைத்த வெள்ளி
இந்த வாரம் யு.எஸ். அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சி நடை பெற்றது. டெமாக்ரட் கட்சியினர் ஜனாதிபதி பதவியைப் பிடித்த போதெல்லாம் பலமாக முயற்சி செய்து, ஒபாமா வந்த பின் ஓராண்டுக்கும் மேலாக ஆசியால் அரசியல் போராட்டம் நடை பெற்றது. ஒரு வழியாக 'சுகாதார சீர்திருத்த' சட்டம் செவ்வாய்க் கிழமை காலையில் ஜனாதிபதி கையெழுத்திட்டு, இந்த நாட்டின் சட்டமானது. 2008 அதிபர் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படியோ,
Saturday, January 23, 2010
ஒரு தேர்தலும், வேதாள உலகமும்
இந்த வாரத்தில் முக்கியமான இரண்டு சம்பவங்கள் நடந்தன. முதலாவது, செனேட் தேர்தலில் டெமாக்ரட் கட்சிக்குக் கிடைத்த அடி.
திரு ஒபாமா, தேர்தலின் பொது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூடச் செய்யவில்லை. எல்லாவற்றையும் வேக வேகமாக ஆரம்பித்து விட்டு, சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட செனேட் மற்றும் பிரநிதிகள் அவையிடம் விட்டு விட்டார். அவர்களோ, பழம் தின்று, கொட்டையையும் தின்பவர்கள். 'உன்னால முடிஞ்சதப் பாத்துக்க' என்பது போல, தமது கார்ப்பரேட் முதலாளிகள் காட்டிய வழியில் ஒவ்வொரு சட்ட மசோதாவையும் முதலாளிகளுக்குச் சாதகமாக எழுத ஆரம்பித்து விட்டனர். மேடை ஏறி ஆறு போலப் பேசிய திரு ஒபாமா, தம்மை அதீத நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்த மக்களிடம் அல்லவா சென்றிருக்க வேண்டும்? அவர் சொன்னால், அவருடன் சேர்ந்து போராடபெருவாரியான மக்களும் காத்திருந்தனர். அவரோ, வரலாறு தந்த அற்புதமான வாய்ப்புகளைக் கை கழுவி விட்டு, தன்னுடைய தவறான ஆலோசகர்கள் தந்த தவறான ஆலோசனைகளுக்குச் செவி சாய்த்தார். தலை நகரில் நடக்கும் எந்த விதமான கேவலமான அரசியலை மாற்றுவேன் என்று சபதமிட்டு வந்தாரோ,
Subscribe to:
Posts (Atom)











